• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Colors Tamil: இதயத்தை திருடாதே சீரியலில் பவா லக்‌ஷ்மன் மற்றும் வைசாலி தணிகா!

Colors Tamil: இதயத்தை திருடாதே சீரியலில் பவா லக்‌ஷ்மன் மற்றும் வைசாலி தணிகா!

இதயத்தை திருடாதே

இதயத்தை திருடாதே

கலர்ஸ் தமிழின் 'இதயத்தை திருடாதே' சீரியலில் தோன்றும் நகைச்சுவை நடிகர் பவா லக்‌ஷ்மன் மற்றும் வைசாலி தனிகா.

  • Share this:
    கலர்ஸ் தமிழின் 'இதயத்தை திருடாதே' சீரியலில் தோன்றும் நகைச்சுவை நடிகர் பவா லக்‌ஷ்மன் மற்றும் வைசாலி தனிகா.

    கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் ஒளிபரப்பாகிவரும் இதயத்தை திருடாதே நெடுந்தொடர் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக வெற்றிநடைபோடும் நிலையில், ஒரு மாபெரும் திருமணம் இதில் இப்போது இடம்பெறவிருக்கிறது. இத்திருமண நிகழ்வுக்கு இன்னும் சுவாரஸ்யத்தை சேர்க்கும் வகையில் இதயத்தை திருடாதே சீரியலின் சிறப்பு எபிசோடில், அதன் மனம் கவர்ந்த ஜோடி ஷிவா-சஹானா ஆகியோருடன் சில்லுனு ஒரு காதல் மற்றும் மாங்கல்ய சந்தோஷம் என்ற பிற பிரபல நெடுந்தொடர்களின் முக்கிய கதாபாத்திரங்களும் பங்கேற்கின்றனர். ஒரே நிகழ்ச்சியில், மக்களின் அபிமானம் பெற்ற இந்த இளம் ஜோடிகள் பங்கேற்பது ஒரு மறக்கமுடியாத தருணமாக மாறுவது நிச்சயம். 2021 ஏப்ரல் 19-ம் தேதி இரவு 7:00 மணி முதல் 9:30 மணிவரை ஒளிபரப்பாகவுள்ள இந்த மாபெரும் கொண்டாட்டத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் பவா லக்‌ஷ்மன் மற்றும் நடிகை வைசாலி தணிகா, முதன்முறையாக சிறப்பு கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.



    இதயத்தை திருடாதே சீரியலின் சிறப்பு எபிசோட், ஷிவாவின் தங்கை ஐஸ்வர்யாவின் சிறப்பான திருமண நிகழ்வை மிக அழகாக சித்தரிக்கிறது. எதிர்பாரா திருப்பங்கள், உணர்வுகளின் கொந்தளிப்புகள் மற்றும் பொழுதுபோக்கு என பல தொடர் நிகழ்வுகளாக இந்த திருமணம் அரங்கேறுகிறது. கலர்ஸ் தமிழின் பிரபல நெடுந்தொடர்களின் நடிகர்கள் பங்கேற்கும் துள்ளலான நடனங்கள், இதனை பார்க்கும் அனைவருக்கும் மறக்கமுடியாத இனிய அனுபவமாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.

    நகைச்சுவை நடிகரான பவா லக்‌ஷ்மன் இந்நிகழ்ச்சியில் தோன்றுவது குறித்து பேசுகையில், “முதல் முறையாக கலர்ஸ் தமிழ் அலைவரிசையின் நிகழ்ச்சியில் பங்கேற்பது அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது. இதயத்தை திருடாதே போன்ற மிகப் பிரபலமான நிகழ்ச்சியில் எனது இந்த சிறப்புத் தோற்றம் குறித்து பெரும் உற்சாகம் கொண்டிருக்கிறேன். திருமண கொண்டாட்ட நிகழ்வில் நகைச்சுவையையும், உற்சாகத்தையும் கொண்டுவருவதன் மூலம் புத்துணர்ச்சி ஊட்டும் ஒரு திருப்பத்தை இந்நிகழ்ச்சி உருவாக்கும். இந்த பாத்திரத்தை மிகவும் அனுபவித்து நான் நடித்தேன். எனது இந்த நடிப்பை பார்வையாளர்களும் பெரிதும் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

    இது குறித்து பேசிய நடிகை வைசாலி தணிகா, “கலர்ஸ் தமிழின் முதன்மையான நிகழ்ச்சியின் இதயத்தை திருடாதே நெடுந்தொடரில் இடம்பெறுவது எனக்கு அதிக உற்சாகத்தையும், கிளர்ச்சியையும் தந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு திருப்பத்தை கொண்டுவருவதால் எனது கதாபாத்திரம் பார்வையாளர்களை மகிழ்ச்சிபடுத்தும் என்று நான் உறுதியாக கருதுகிறேன். இந்நிகழ்ச்சியின் திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியதை நான் முழுமையாக ரசித்து அனுபவித்தேன். எனது கதாபாத்திரத்தோடு உடனடியாக ஒரு பிணைப்பினை பார்வையாளர்கள் உணர்வார்கள் என நம்புகிறார்” என்றார்.

    2021 ஏப்ரல் 19-ம் தேதி திங்கள் அன்று இரவு 7:00 மணிமுதல் 9:30 வரை, இதயத்தை திருடாதே நெடுந்தொடரின் சிறப்பு எபிசோட்-ஆக திருமண விழா கொண்டாட்டத்தை கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்ய மறவாதீர்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை கிடைக்கப்பெறுகிறது. தங்களது வசதிக்கேற்ப எந்த நேரத்தில் இந்நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் VOOT – ஐ டியூன் செய்யலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: