பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் புதியதாக கார் வாங்கியுள்ளார். இதுக் குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
சின்னத்திரை ரசிகர்கள் மிகவும் ஆவலாக விரும்பி பார்க்கும் ரியாலிட்டி ஷோவாக இருத்து வருகிறது பிக்பாஸ். ஸ்டார் விஜய் டிவி-யில் கடந்த 2017-ல் துவங்கி இதுவரை வெற்றிகரமாக 5 சீசன்களை நிறைவு செய்துள்ளது பிக்பாஸ். கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த தமிழகத்தின் மிக பெரிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸை உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதன் பின்பு பிக்பாஸின் OTT வெர்ஷனான "பிக்பாஸ் அல்டிமேட்" டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது.
குக் வித் கோமாளியில் 3வது இடம்...அம்மு அபிராமி யாருக்கு நன்றி சொன்னார் தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 4 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸை எளிதில் ரசிகர்கள் மறந்து இருக்க மாட்டார்கள் அந்த அளவுக்கு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இருக்கும் பாலாஜி பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார். தற்போது வெள்ளித்திரையில் நடிக்க ரெடி ஆகி வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் பாலாஜி நேற்றைய தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் புதியதாக கார் வாங்கி இருக்கும் தருணம் இடம் பெற்றுள்ளது.
View this post on Instagram
பாலாஜி கார் வாங்கிய விஷயத்தை வித்தியாசமாக ரசிகர்களிடம் ஷேர் செய்கிறார். அதாவது ”புதியதாக மாடு வாங்கி இருக்கோம்” என்று சொல்லி, காரை திறந்து காட்டுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர். அதுமட்டுமில்லை பலரும் ”அண்ணா இது உங்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி” எனவும் கூறியுள்ளனர். பாலாஜியின் இந்த வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Balaji murugadoss, Television, Vijay tv