Home /News /entertainment /

குடித்துவிட்டு ராதிகாவிடம் உண்மையை உளறும் கோபி! அடுத்த என்ன நடக்க போகிறது?

குடித்துவிட்டு ராதிகாவிடம் உண்மையை உளறும் கோபி! அடுத்த என்ன நடக்க போகிறது?

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியல்

Baakiyalakshmi Serial : பாக்கியலட்சுமி சீரியலின் புதிய ப்ரோமோ ஒன்று ரீலிஸாகி சீரியல் பிரியர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    பாக்கியலட்சுமி சீரியல் 2020 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கியது. இந்த சீரியல் தொடங்கிய நாள் முதல் இன்று வரை சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் பாக்கியலட்சுமியாக கே.எஸ். சுசித்ரா, கோபியாக சதீஷ்குமார், ராதிகாவாக ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

    திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரம் ஹீரோவை டார்ச்சர் செய்வது பிடிக்கவில்லை என்றால் சில நேரத்தில் சமூக வலைதளங்களில் அந்த வில்லன் கதாபாத்திரத்தை திட்டி, கலாய்த்து தங்கள் ஆதங்கத்தை தீர்த்துக்கொள்வார்கள். அப்படிப்பட்ட சம்பவம் கோபிக்கும் அடிக்கடி நடக்கும். சீரியல் என்றாலும் கூட கோபி, பாக்கியலட்சுமி ஏமாற்றுவதை பலரும் ஏற்றுக்கொள்வதில்லை. கோபி, ராதிகாவுடன் தொடர்பில் இருக்கும் உண்மை எப்படியாவது பாக்கியாவுக்கு தெரிந்துவிட வேண்டும் என சீரியல் பிரியர்கள் காத்திருக்கின்றனர்.

    அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ வெளியாகிவுள்ளது.  ப்ரோமோவில் கோபி குடித்துவிட்டு பாக்கியா தான் எனது மனைவி என்ற உண்மையை உளறிவிடுகிறார். அதை கேட்ட ராதிகா என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழுகிறார்.

    also read  : பழைய கண்ணம்மா இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா? நீங்களே பாருங்க..

    ‘எதுக்காக குடிச்சிட்டு இங்க வந்து ட்ராமா பண்ணிட்டு இருக்கீங்க, உங்க குடும்பத்த பாக்கனும்னு சொன்னேன். அது உங்களால செய்ய முடியல என்று ராதிகா கேட்க, கோபியோ போதையில் உணர்ச்சிவேசப்பட்டு, என் ஃபேமிலிய பாக்கணும் அவ்ளோ தான’ என்று கூறிவிட்டு பாக்கியவுடன் இருக்கும் புகைப்படத்தை ராதிகாவிடம் காட்டுகிறார். உன்னோட பெஸ்ட் ஃப்ரண்ட் பாக்கியா தான் என்னுடைய மனைவி என்று கூறுகிறார். இதை கேட்டு ராதிகா அதிர்ச்சியில் உறைகிறார்.



    ஒரு வழியாக ராதிகாவுக்கு கோபியின் தில்லாலங்கடி வேலை தெரிந்துவிட்டது. இந்த உண்மை தெரிந்த பின்பு ராதிகா அடுத்து என்ன செய்வார் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி