• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சீரியலில் அம்மா பையன்.. நிஜத்தில்? பாக்கியலட்சுமி எழில் பற்றி பலருக்கும் தெரியாதவை!

சீரியலில் அம்மா பையன்.. நிஜத்தில்? பாக்கியலட்சுமி எழில் பற்றி பலருக்கும் தெரியாதவை!

பாக்கியலட்சுமி சீரியல் எழில்

பாக்கியலட்சுமி சீரியல் எழில்

“அது இது எது” மற்றும் “கலக்கல் சாம்பியன்ஸ்” போன்ற நிகழ்ச்சிகளில் உதவி இயக்குநராகவும் விஷால் பணிபுரிந்தார்

  • Share this:
    bakiyalakshmi serial yazhil : சின்னத்திரை நாயகனாக பெண்களுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் பாய் பாக்கியலட்சுமி புகழ் எழில் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்கள்

    வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது. ஆனால் ஒருமுறை வாய்ப்பு கிடைத்து விட்டால் அதை மிகச் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் எல்லா நேரங்களிலும் நிலைத்து நிற்க முடியும். அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் எழில், இவரின் நிஜப்பெயர் விஷால். கிடைத்த வாய்ப்பில் எல்லாம் சிக்சர் அடித்து கொண்டிருக்கிறார். வீஜேவாக தொடங்கிய இவரின் பயணம் இன்று சின்னத்திரையில் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான சின்னத்திரை நாயகன் என்ற பெயரை வாங்கி தந்துள்ளது.

    also read பாசக்கார பிரதர்ஸ் கோபிநாத் - பிரபு! ஒரே சேனலில் இருவரின் பயணமும் வெற்றி தான்

    சீரியலில் அம்மா மீது பாசத்தை பொழியும் மகனாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தவர் அடுத்து அழகான சிரிப்பால் க்யூட்டான லுக்கில் கல்லூரி மாணவிகளையும் கவர்ந்துவிட்டார்.

    இவரது சொந்த ஊர் சென்னைதான். அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிக்கும் போதே ஆன்கரிங் பயணத்தைத் தொடங்கி விட்டார். வெளிச்சம் டிவியில் “கால் பன்னா காசு” , வேந்தர் டிவியில் “துள்ளுவதோ இளமை” போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவருக்கு தான் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் வாய்ப்பு கிடைத்தது. லைவ் ஷோவில் விஷாலுக்கு நிறைய பெண்கள் கால் செய்து அழகாக பேசுவதாக கூறுவார்கள்.

    விஷால் ஃபோட்டோஷூட்


    பாக்கியலட்சுமி சீரியலுக்கு முன்பு கடந்த 2018ல் ஒளிபரப்பான கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் மதனாக நடித்திருந்தார். விஜய் டிவியின் டான்ஸ் ஷோவிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார். கிடைத்த இடத்தில் எல்லாம் சிக்சர் அடித்து விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவராகவும் நடித்து இருந்தார். ஆனால் படம் முழுக்க அவரால் நடிக்க முடியவில்லை. உடல்நிலை காரணமாக பாதியிலேயே விலகினார். வாத்தி கம்மிங் சாங்கில் இருப்பார்.

    அதுமட்டுமில்லை விஜய் டிவியில் ஒளிப்பரப்பான “அது இது எது” மற்றும் “கலக்கல் சாம்பியன்ஸ்” போன்ற நிகழ்ச்சிகளில் உதவி இயக்குநராகவும் விஷால் பணிபுரிந்தார். பாக்கியலட்சுமியின் வெற்றிக்கு பிறகு எழிலுக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ஃபாலோவர்ஸ். அடிக்கடி ஃபோட்டோ ஷூட்டும் நடத்தி லைக்ஸ்களை அள்ளுகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: