ரஜினிக்கே ஜோடினா சும்மாவா? பாக்கியாவை பாடாய்படுத்தும் மாமியார் ஈஸ்வரி ரீவைண்ட்!

பாக்கியலட்சுமி மாமியார்

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை பாடாய்படுத்தும் மாமியார் ரோலில் நடித்திருக்கும் நடிகை ராஜலட்சுமி பற்றிய ரீவைண்ட் இதோ

  இல்லதரசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சீரியலில் முதலிடத்தில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த சீரியலில் பாக்கியாவின் மாமியாராக ஈஸ்வரி ரோலில் நடித்திருக்கும் நடிகை ராஜலட்சுமியை திட்டாத ரசிகர்களே இல்லை எனலாம். மகன் கோபிக்காக, பாக்கியாவை எப்போதுமே திட்டும் மாமியார் கேரக்டர். எது செஞ்சாலும் பாக்கியாவை குறை சொல்லியே சந்தோஷ்ம் காண்பவர். சீரியலில் கிட்டதட்ட வில்லியே இவர் தான். சீரியலை பார்க்கும் ரசிகர்கள் இவரை ரியல் கேரக்டர் போல் நினைத்து திட்டி தீர்க்கின்றனர். அதுதான் அந்த கதாபாத்திரத்தின் வெற்றியே. தான் தேர்ந்தெடுத்து நடிக்கும் சீரியலில் தனது கதாபாத்திரத்தை எப்போதுமே பேச வைத்துவிட்டார் ராஜலட்சு.மி..பின்ன சூப்பர் ஸ்டார் ஜோடின்னா சும்மா?

  80களில் சூப்பர் டூப்பர் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார். ரஜினியுடன் மூன்று முகம் படத்தில் அப்பா ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.  தெலுங்கில் என். டி. ராமா ராவ், நாகேஸ்வர ராவ், ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா, சங்கர் மலையாளத்தில் மோகன்லால், திலீப், ஜிதேந்திரா, மம்முட்டி, விஷ்ணுவர்தன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆந்திராவில் பிறந்து வளர்ந்த இவர், கே. ஆர். கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டு நடிப்பிலிருந்து சில ஆண்டுகள் விலகினார்.

  தெலுங்கு படத்தில் ராஜலட்சுமி


  சிங்கப்பூரில் செட்டிலானார். அதன் பின்பு மீண்டும் தமிழ் சினிமாவில் அம்மா ரோல்களில் முகம் காட்டத் தொடங்கினார். இதுவரை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதன் பின்பு சின்னத்திரையிலும் இவரின் முகத்தை பார்க்க முடிந்தது. சன்டிவியில் ஒளிபரப்பான மேகலா, தெய்வமகள் தொடர்களில் நடித்தார். விஜய் டிவியில் ராஜா ராணி நடித்தைத் தொடர்ந்து தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி கேரக்டரில் பாக்கியா மாமியாராக நடித்து வருகிறார். திரைத்துறையில் 40 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வெற்றிக்கரமாக பயணித்து வருகிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: