Home /News /entertainment /

ஜெயித்த பாக்கியா.. கோபிக்கு எதிரான முயற்சியில் முதல் வெற்றி!

ஜெயித்த பாக்கியா.. கோபிக்கு எதிரான முயற்சியில் முதல் வெற்றி!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

சமையல், உழைப்பு மீது நம்பிக்கை கொண்டு போட்டியில் கலந்துக் கொள்கிறார் பாக்கியா.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் சமையல் ஆர்டருக்காக நடத்தப்படும் போட்டியில் பாக்கியா ஜெயித்து விட்டார்.

    பாக்கியலட்சுமி சீரியலில் கோபி வீட்டை விட்டு சென்ற பிறகு குடும்பத்தில் பணப்பிரச்சனை எட்டிப்பார்க்கிறது. அதுமட்டுமில்லாமல் கரண்ட் பில், இனியா ஸ்கூல் ஃபீஸ், குடும்ப செலவு என பெரிய பட்ஜெட் விழ பாக்கியா பதறுகிறார். இதுதான் சரியான டைம் என்று கோபி ஃபோன் செய்து பாக்கியாவை கிண்டல் செய்கிறார். போட்ட சபதம் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், பில்லை மட்டும் அனுப்பும் மொத்த செலவையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார். இதனால் பாக்கியாவின் தன்மானம் எட்டிப் பார்க்கிறது. மொத்த செலவையும் பார்க்க, கோபிக்கு சரியான பதிலடி தர, 1 வருடத்தில் போட்ட சபதத்தில் ஜெயிக்க எதாவது பெரிய பிசினஸ் செய்ய வேண்டும் என நினைக்கிறார்.

    இயக்குனர் வெங்கட் பிரபு எல்லா படத்திலும் இதுதான் பண்றாரு.. புலம்பிய விஜய் டிவி பிரபலம்!

    அதன்படி கல்யாண ஆர்டர் எடுத்து சமைத்துக் கொடுக்கலாம் என முடிவு செய்கிறார். அதற்காக நடத்தப்படும் நேர்காணலில்  பாக்கியா கலந்துக் கொள்கிறார். இதற்கு ஜெனியும், எழிலும் ஹெல்ப் செய்கின்றனர். பயோடேட்டா அப்படின்னா என்ன ? என கேட்கும் அளவுக்கு தான் பாக்கியா இருக்கிறார். ஆனால் தனது சமையல், உழைப்பு மீது நம்பிக்கை கொண்டு போட்டியில் கலந்துக் கொள்கிறார். 15 நிமிடத்தில் சூப்பரான டிஷ்  செய்து ஜெயிக்கிறார்.

    பாக்கியா ஆர்டர் கேட்டு வந்து இருப்பது தொழிலதிபர் சந்திர சேகரிடம். அவர் வேற யாருமில்லை ஏற்கெனவே பாக்கியா அவரின் தொழிற்சலைக்கு ஒருமுறை சமைத்து கொடுத்து  நல்ல பெயர் வாங்கி இருக்கிறார். அவர் பாக்கியாவை பார்த்ததும் சந்தோஷத்தில் விசாரிக்கிறார். கடைசியில் பார்த்தால் அவரின் 5 கல்யாண மண்டபத்திற்கு கேட்ரிங் செய்வதற்காக தான் இந்த நேர்காணல் நடத்தப்படுகிறது. போட்டியில் பாக்கியா ஜெயித்தாலும் அவரிடம் நிறைய ஆட்கள் வேலை செய்யாததால் சந்திர சேகர் ஆர்டரை பாக்கியாவிடம் கொடுக்க தயக்கம் காட்டுகிறார்.

    அந்த நிகழ்ச்சிக்கு செல்ல தான் சீரியலில் இருந்து விலகினாரா அர்ச்சனா?

    கடைசியில் பாக்கியா வழக்கம் போல் அப்படி இப்படி பேசி அவரின் மனதை மாற்றுகிறார். சந்திரசேகர் பாக்கியாவுக்கு மற்றொரு டெஸ்ட் வைக்கிறார். 200 பேர் கலந்துக் கொள்ளும் பார்ட்டி ஒன்றுக்கு முதலில் சமைத்துக் காட்ட சொல்கிறார். அதை வைத்து இந்த சமையல் ஆர்டர் தருவதை பற்றி முடிவு எடுக்கலாம் என்கிறார். பாக்கியாவும் பயங்கர ஹேப்பி. முதல் முயற்சியே பாக்கியாவுக்கு வெற்றியாக அமைந்து விட்டதால் எழிலும் சந்தோஷப்படுகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி