Home /News /entertainment /

5 வயதில் குழந்தையை பறிகொடுத்த பிரபல சின்னத்திரை ஜோடி.. மகள் நினைவாக செய்யும் சேவை!

5 வயதில் குழந்தையை பறிகொடுத்த பிரபல சின்னத்திரை ஜோடி.. மகள் நினைவாக செய்யும் சேவை!

படவா கோபி - ஹரிதா

படவா கோபி - ஹரிதா

இந்த சம்பவத்திற்கு பிறகு கோபியும் ஹரிதாவும் செய்து வரும் உன்னதமான சேவை பலருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

    விஜய் டிவி பிரபலங்களான படவா கோபி- ஹரிதா தம்பதியின் உன்னத சேவைக்கு நெட்டிசன்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 5 வயதில் தங்களது ஒரே மகளை இழந்த இவர்கள், மகளின் நினைவாக இப்போது 200க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து வளர்பது பலரும் அறிந்திடாத செய்தி.

    மேடை நாடக கலைஞரான படவா கோபியை விஜய் டிவி நிகழ்ச்சியில் அடிக்கடி பார்க்கலாம். இவர் தனது மனைவி ஹரிதாவுடன் விஜய் டெலிவிஷன் ரியாலிட்டி நிகழ்ச்சிகளான ஜோடி நம்பர் 1, மிஸ்டர் & மிஸ்ஸஸ், நம்ம வீட்டு கல்யாணம் போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மிமிக்ரி மன்னனான படவா கோபி, தோனி போல் பேசி காட்டுவதில் வல்லவர். இவரை முதன் முதலில் சினிமா உலகிற்கு அறிமுகம் செய்தவர் மறைந்த இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர். தொடர்ந்து காமெடி நடிகராக, குணச்சித்திர நடிகராக சினிமாவில் கலக்கி வருகிறார் கோபி. இது தவிர இவர் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

    7 மில்லியன் என்றால் சும்மாவா.. செம்ம ஹாப்பியில் விஜய் டிவி மைனா நந்தினி!

    படவா கோபி - ஹரிதாவின் செல்ல மகள் கடந்த 2007ஆம் ஆண்டு மறைந்தார். 5 வயதில் மகளின் இறப்பு இருவரையும் புரட்டி போட்டது. மீளா துயரத்தில் இருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து மீண்டனர். ஆனாலும் அவர்களால் தங்களின் செல்ல மகளை மறக்க முடியவில்லை. இந்த விஷயம் சின்னத்திரை பிரபலங்கள் பலருக்கும் தெரியும். அதுமட்டுமில்லை, ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கோபி இதை வருத்ததுடன் பகிர்ந்து இருக்கிறார்.

    இனி வெண்பா எனக்கு வேண்டாம்.. முற்றுப்புள்ளி வைத்த டாக்டர் பாரதி!



     




    View this post on Instagram





     

    A post shared by Badava Gopi Actor (@badavagopi)






    ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு கோபியும் ஹரிதாவும் செய்து வரும் உன்னதமான சேவை பலருக்கும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. இவர்கள் மறைந்த தங்களது குழந்தையின் நினைவாக ட்ரஸ்ட் ஒன்று தொடங்கி அதன் மூலம் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். அவர்களான செலவை இவர்கள் பார்த்து கொள்கிறார்கள். இவர்களின் இந்த உன்னதமான சேவை நீண்ட ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த தகவல் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதன் மூலம் பலருக்கும்  இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் இருவரையும் மனதார பாராட்டி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி