ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இந்த வயசில் எனக்கு 23 வயது பெண்ணுடன் திருமணமா? உண்மையை உடைத்த பப்லு பிரித்விராஜ்!

இந்த வயசில் எனக்கு 23 வயது பெண்ணுடன் திருமணமா? உண்மையை உடைத்த பப்லு பிரித்விராஜ்!

பப்லு பிரித்விராஜ்

பப்லு பிரித்விராஜ்

2வது திருமணம் பற்றி பிரித்விராஜ் மெளனம் கலைத்து இதுக் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் பப்லு பிரித்விராஜ் 23வயது பெண்ணுடன் 2வது திருமணம் என பரவிய தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

  கிட்டதட்ட 47 ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நடிகராகவும், வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் சின்னத்திரை நடிகராகவும் அறியப்பட்டு வரும் பப்லு பிரித்விராஜ் தற்போது சன் டிவி கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வருகிறார். கெளதம் ரோலில் இவரின் நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன்பு ஜெயா டிவியில் சவால் நிகழ்ச்சியை 5 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிக்கரமாக நடத்தினார். ராதிகாவுடன் செல்வி, வாணி ராணி சீரியல்களிலும் நடித்தார். இதுவரை இவர் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

  தாலி கழட்டி வச்சிட்டு நடிக்க மாட்டேன்.. சீரியல் நடிகையின் அதிரடி பதில்!

  இவருக்கு திருமணம் ஆகி அஹத் என்ற மகன் இருக்கிறார். அவருக்கு 23 வயது. ஆட்டிஸம் குறைப்பாடுள்ள மகனை பற்றி பல மேடைகளில் பிரித்வி பேசி இருக்கிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு 56 வயதாகும் பிரித்வி 23 வயது மதிக்கத்தக்க மலேசிய பெண் ஒருவரை 2வது திருமணம் செய்துக் கொண்டதாக இணையத்தில் தகவல்கள் பரவின. மலேசியாவில் தொழில் தொடங்க அந்த பெண் பப்லுவுக்கு உதவி புரிந்ததாகவும், பின்னர் இருவரும் திருமணம் செய்துக் கொண்டதாகவும் இதற்கு முன்பே முதல் மனைவி பீனாவை பிரித்விராஜ் பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

  இதுக் குறித்து உண்மை நிலவரம் தெரியாத நிலையில் தற்போது பிரித்விராஜ் மெளனம் கலைத்து இதுக் குறித்து விளக்கம் அளித்துள்ளார். தனது யூடியூப் சேனலில் இதுப்பற்றி ரசிகர்களின் கேள்விக்கு பிரித்விராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

  ' isDesktop="true" id="823122" youtubeid="POZ2h7Af20E" category="television">

  அதில் அவர் பேசியிருப்பதாவது, “ 2வது திருமணம் செய்துகொண்டதாக பலர் போன் போட்டு கேட்கிறார்கள். திருமணம் செய்யப்போகிறேன், ஆனால் இப்போது இல்லை, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கையை தனித்தனியாக வைக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் எனது தனிப்பட்ட வாழ்க்கையை பிரைவேட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் முயற்சி செய்து பார்க்கிறேன்.ஆனால் சிலர் விடமாட்ரார்கள்.

  நான் எதாவது செய்தால் அதை வெளிப்படையாக செய்பவன். உங்கள் எல்லோருக்கும் தெரிந்து உங்கள் ஆசீர்வாதத்துடன் தான் பண்ணுவேன். திருட்டுத்தனமாக எதுவும் செய்வதில்லை' என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பப்லு.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, TV Serial