ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மனைவி தராததை காதலி தந்தார்.. நடிகர் பப்லு பிரித்விராஜ் ஓபன் டாக்!

மனைவி தராததை காதலி தந்தார்.. நடிகர் பப்லு பிரித்விராஜ் ஓபன் டாக்!

நடிகர் பப்லு பிரித்விராஜ்

நடிகர் பப்லு பிரித்விராஜ்

அவர் சரியாக நடந்துக் கொள்ளாததால் தான் இப்போது 23 வயது பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும் பிரித்விராஜ் ஓப்பனாகபேசியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் பப்லு பிரித்விராஜ் 23வயது பெண்ணுடன் 2வது திருமணம் செய்துக் கொள்ள இருப்பதை பற்றி பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். வருங்கால மனைவியுடன் பப்லு அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

  தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிகர், குணச்சித்திர பாத்திரம், வில்லன் என பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகர் பப்பு பிரித்விராஜ் . 56 வயதாகும் பப்லு தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார். சன் டிவி கண்ணான கண்ணே சீரியலில் அப்பா ரோலில் நடிக்கிறார். அதே போல் ராதிகாவின் செல்வி, வாணி ராணி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இதுவரை  200 படங்களுக்கு மேல் நடித்துள்ள பப்லு அண்மையில் 2வது திருமணம் சர்ச்சையில் சிக்கினார்.

  கமலால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டேனா? மெளனம் கலைத்த இயக்குனர் லிங்குசாமி!

  56 வயதாகும் பப்லு தனது மகனை விட வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டதாக இணையத்தில் தகவல் வெளியானது. அந்த பெண் மலேசியாவை சேர்ந்தவர் என்றும் அவர், பிரித்விராஜின் பிசினஸூக்கு ஹெல்ப் செய்தார் பின்பு இருவரும் திருமணம் செய்துக் கொண்டார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி இணையத்தில் வைரலானதும் பப்லு பிரித்விராஜ் தனது யூடியூப் பக்கத்தில் இதுக் குறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

  அதில், “ 23 வயது பெண்ணை காதலிப்பது உண்மை தான். ஆனால் இன்னும் கல்யாணம் செய்யவில்லை. முறைப்படி எல்லோருக்கும் அறிவித்து விட்டுதான் கல்யாணம் செய்வேன்” என கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது பப்லு,  திருமணம் செய்யவுள்ள 23 வயதாகும் ஷீட்ல உடன் பிரபல யூடியூப் சேனலுக்கு ஜோடியாக பேட்டி அளித்துள்ளார்.

  முதன் மனைவி மகனுடன் பிரித்விராஜ்

  அந்த பேட்டியில் ஷீட்ல மலேசியாவை சேர்ந்தவர் அல்ல. அவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்றும் ஐடி துறையில் வேலை செய்யும் அவரை பப்லு பெங்களூர் காபி ஷாப்பில் மீட் செய்ததாக கூறியுள்ளார் ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக, பின்பு பப்லு அந்த பெண்ணிடம் தனது காதலை சொல்லி இருக்கிறார். அவரும் ஏற்றுக் கொண்டதால் காதல்,  அடுத்து கல்யாணத்திற்கு செல்ல இருப்பதாக பப்லு தெரிவித்துள்ளார். தனது முதல் திருமண வாழ்க்கை பற்றி பேசியுள்ள பப்லு , தனது நெருங்கிய தோழியான பீனாவையே திருமணம் செய்துக் கொண்டாராம். ஆனால் அவர் மனைவியாக நடந்துக் கொள்ளவில்லை என்றும் மரியாதை, காதல், பாசம், இன்பம், துன்பம் என எதிலும் அவர் சிறந்த மனைவியாக நடந்துக் கொள்ளவில்லை. அவர் சரியாக நடந்துக் கொள்ளாததால் தான் இப்போது 23 வயது பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும் பிரித்விராஜ் ஓப்பனாக பேசியுள்ளார்.

  அவரிடம் இருந்து கிடைக்காத அனைத்தும் ஷீட்ல தருவதாகவும் 6 வருட தனிமையை அவர் சரி செய்ததாகவும் கூறியுள்ளார். இதுத்தவிர்த்து பல விஷயங்களை பப்லு பிரித்விராஜ் அந்த பேட்டியில் வெளிப்படையாக பேசி இருப்பது இணையத்தில் பலரின் கவனத்தையும் பெற்று பேசும் பொருளாக மாறியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, TV Serial