Home /News /entertainment /

பாக்கியலட்சுமியில் அந்த விஷயத்தை சொல்லி கோபியை மிரட்டும் ஈஸ்வரி அம்மா!

பாக்கியலட்சுமியில் அந்த விஷயத்தை சொல்லி கோபியை மிரட்டும் ஈஸ்வரி அம்மா!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியா - ராதிகா விஷயத்தில் அடுத்து கோபி எடுக்க போகும் முக்கிய முடிவு என்ன?

    பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா வீட்டுக்கு வர மறுப்பதால் ஈஸ்வரி அம்மா உயிரை விட்டு விடுவேன் என கூறி கோபியை மிரட்டுகிறார்.

    பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மொத்த குடும்பத்திடமும் மாட்டிக் கொண்ட பின்பு கதை சுறுசுறுப்பாக நகர்கிறது. பாக்கியா வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால் கோபிக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் மொத்த குடும்பமும் பாக்கியா இல்லாமல் கவலை  கொள்கின்றனர். ஈஸ்வரி அம்மா நேரில் போய் பாக்கியாவிடம் பேசி கெஞ்சுகிறார். ஆனாலும் பாக்கியா வீட்டுக்கு வரமாட்டேன் என்று சொல்லி விடுகிறார். இந்த பக்கம் இனியா ஃபோன் செய்து பேசி கூப்பிடுகிறார். ஆனாலும் பாக்கியா விடாபிடியாக இருக்கிறார். இதை எல்லாம்  நினைத்து கோபி கவலை  கொள்ளாமல் ராதிகாவை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்.

    முடிவுக்கு வந்த குஷ்புவின் ’மீரா’ சீரியல்.. கிளைமாக்ஸில் காத்திருக்கும் ட்விஸ்ட்!

    ராதிகா வீட்டில் மயூவுக்கு கோபி ஞாபகம் வந்து விட்டது. இதனால் குழந்தை காய்ச்சலில் படுத்து விட்டார். ராதிகா மனசு மாறி கோபியை கூப்பிட வேண்டும் என அவரின் அம்மாவும் அண்ணனும் நினைக்கின்றனர். ஆனால் ராதிகா மனம் மாறுவதாக இல்லை. அதே போல் பாக்கியாவும் ஒரு முடிவுடன் இருக்கிறார். கோபி கூப்பிட்டால் மட்டுமே பா க்கியா மறுபடியும் வீட்டுக்கு வர வாய்ப்புண்டு. இதனால் ஈஸ்வரி அம்மா கோபியை மிரட்டுகிறார்.

    ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் ராசி.. நடிகை காயத்ரி எடுத்திருக்கும் அதிரடி முடிவு!

    பாக்கியா இந்த வீட்டுக்கு வரவில்லை என்றால் தன்னுடைய உயிரை  விட்டு விடுவேன் என்கிறார். இது கோபிக்கு அதிர்ச்சியை தருகிறது. அவருக்கு தனது அம்மா மற்றும்  இனியா மீது பயங்கர அன்பு. இவர்கள் இருவரும் அழுவதை கோபியால் பார்க்க முடியாது. இப்படி இருக்கையில் ஈஸ்வரி அம்மா இறந்து விடுவேன் என்று சொன்னதும் என்ன செய்வது என்று தெரியாமல் கோபி குழம்பி நிற்கிறார்.

    பாக்கியா - ராதிகா விஷயத்தில் அடுத்து கோபி எடுக்க போகும் முக்கிய முடிவு என்ன?  என்பது  தான் சீரியலில் அடுத்து வர போகும்  திருப்பம். அதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி