Home /News /entertainment /

ஆஸ்பிட்டலில் கோபி.. பதறி ஓடி வரும் பாக்கியா -ராதிகா! பாக்கியலட்சுமியில் அடுத்து நடக்க போவது என்ன?

ஆஸ்பிட்டலில் கோபி.. பதறி ஓடி வரும் பாக்கியா -ராதிகா! பாக்கியலட்சுமியில் அடுத்து நடக்க போவது என்ன?

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியாவுக்கு ராதிகா தான் அந்த பெண் என்ற உண்மை தெரிய வருமா?

    பாக்கியலட்சுமி சீரியல் உச்சக்கட்ட பரபரப்பில் சென்று கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடுக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நாளுக்கு நாள் ஏகப்பட்ட திருப்பம். இவ்வளவு நாளா ராதிகா, பாக்கியா, அம்மா, அப்பா என மொத்த குடும்பத்தையும் ஏமாற்றி வந்த கோபி இப்போது மொத்தமாக மாட்டிக் கொண்டார். ராதிகாவிடம் அவரே எல்லா உண்மையும் ஒத்துக் கொண்டார். அதனால் புயல் அடித்தது. இப்போது ராஜேஷ் கோபியின் ஃபேமலியிடம் எல்லா உண்மைகளையும் சொல்ல கோபியின் கதை பாவம் என்பது போல் ஆகிவிட்டது. ஒருபக்கம் ராதிகா கோபி வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார். இந்த பக்கம் கோபிக்கு இருக்கும் ராதிகா உறவை பற்றி மொத்த குடும்பத்திற்கும் தெரிந்து விட்டது.

    ரசிகர்களின் கோரிக்கையை மதித்த நடிகர்.. ரோஜா அர்ஜூன் சொன்ன குட் நியூஸ்!

    தனது மகனின் உண்மை முகத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் கதறி அழுகிறார் ஈஸ்வரி அம்மா. அந்த கோபத்துடன் கோபிக்கும் ஃபோன் செய்து பேசுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான பரபரப்பு புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அம்மாவிடம் பேசிவிட்டு பதற்றமாக காரை ஓட்டி வரும் கோபி, வீட்டில் நடக்கும் பிரச்சனை பற்றி யோசித்து கொண்டே வண்டி ஓட்டுகிறார். அன்று பாக்கியா கேட்ட கேள்வி, ராஜேஷிடம் சண்டை, இப்போது அம்மா ஃபோனில் பேசியதை நினைத்து கோபிக்கு பயம் தாங்கல.



    இந்த நேரத்தில் தான் கோபியின் கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகிறது. ஆட்டோ டிரைவர் ஒருவர் கோபியை காப்பாறி ஆஸ்பிட்டல் அழைத்து வருகிறார். ஆஸ்பிட்டலில் இருந்து பாக்கியா மற்றும் ராதிகாவுக்கு ஃபோன் போகிறது. இருவரும் பதறி துடித்து கோபியை பார்க்க ஆஸ்பிட்டல் வருகின்றனர். இருவரும் சந்தித்து கொள்வார்களா? பாக்கியாவுக்கு ராதிகா தான் அந்த பெண் என்ற உண்மை தெரிய வருமா? ராதிகாவே எல்லா உண்மையையும் சொல்லி விடுவாரா? என இப்படி ஆயிரம் கேள்விகள் ரசிகர்களுக்கு தோன்றுகிறது. எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ள இந்த சீரியலின் எபிசோடுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி