ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ராதிகா பற்றி கோபியிடம் கேட்கும் பாக்கியா.. பாக்கியலட்சுமியில் அதிரடி ட்விஸ்ட்!

ராதிகா பற்றி கோபியிடம் கேட்கும் பாக்கியா.. பாக்கியலட்சுமியில் அதிரடி ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடுக்கான அதிரடி புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா பற்றி கோபியிடம் கேட்கிறார் பாக்கியா. இதுக் குறித்த அதிரடி புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல் நாளுக்கு நாள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கோபி ராதிகாவிடம் மாட்டிக் கொண்ட பிறகு தினம் தினம் அதிரடி திருப்பங்கள் சீரியலில் அரங்கேறி வருகின்றன. ஒருபக்கம் கோபியை வேண்டாம் என வெறுக்கிறார் ராதிகா. ஆனால் கோபி, ராதிகா தான் வேண்டும் என சொந்த குடும்பத்தை வெறுக்கிறார். நேற்றைய எபிசோடில் போலீஸ் ஸ்டேஷனில் ராதிகா - கோபி கல்யாணம் இன்னும் 3 மாதங்களில் நடைபெறும் என ராதிகாவின் அம்மா உறுதி கொடுத்துள்ளார். ஆனால் ராதிகாவுக்கு இதில் துளியும் விருப்பமில்லை.

பாக்கியாவுக்கு மிகப் பெரிய துரோகத்தை செய்யும் ராதிகா!

அதனைத்தொடர்ந்து வெளியான புரமோவில் பாக்கியாவும் ராதிகாவும் கோவிலில் சந்திக்கின்றனர். அப்போது ராதிகா கூடிய விரைவில் மும்பைக்கு கிளம்ப இருப்பதாக கூறுகிறார். அதுமட்டுமில்லை இனிமேல் உங்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இருக்காது என சுற்றி வளைத்து கூறுகிறார். இதை கேட்டு பாக்கியா கண்கலங்குகிறார். இதை வைத்து ராதிகா நிரந்தரமாக  கோபியை பிரிய முடிவு  எடுத்து விட்டார் என தெரிய வந்தது. இந்நிலையில் தற்போது இன்றைய எபிசோடுக்கான அதிரடி புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

' isDesktop="true" id="762896" youtubeid="Ve43Amgb5t8" category="television">

அதாவது கோபி மீது சந்தேகத்தில் இருக்கும் பாக்கியா, இன்றைய எபிசோடில் கோபியின் ஃபோனை எடுத்து செக் செய்கிறார். அப்போது கோபி அதை பார்த்து விடுகிறார். உடனே பாக்கியாவிடம் சண்டைக்கு போக, கோபத்தில் வெடிக்கும் பாக்கியா யாரிடம் கோபி இரவில் ஃபோன் பேசுகிறார் என தெரிந்து கொள்ள நினைக்கிறார். அதை பற்றி கோபியிடமே தைரியமாக கேட்கிறார். கோபிக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை.

வழக்கம் போல் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். ஆத்திரத்தில் பாக்கியாவை திட்டுகிறார். ஆனால் பாக்கியா விடுவதாக இல்லை. அடுத்து என்ன நடக்கும்? கோபி எல்லா உண்மையும் சொல்லி விடுவாரா? இல்லை வழக்கம் போல் கோபி எஸ்கேப் ஆகி விடுவாரா? என்பது இன்று இரவு 8.30 மணிக்கு எபிசோடில் தெரிய வரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Vijay tv