Home /News /entertainment /

பாக்கியலட்சுமியில் கோபியின் நாடகம் முடிவுக்கு வரும் நேரம்..குடும்பத்துக்கு உண்மை தெரிந்தது!

பாக்கியலட்சுமியில் கோபியின் நாடகம் முடிவுக்கு வரும் நேரம்..குடும்பத்துக்கு உண்மை தெரிந்தது!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடுக்கான புரமோ வெளியாகியுள்ளது.

    பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் அதிரடி திருப்பங்கள் அரங்கேற உள்ளன. இதுக் குறித்த பரபரப்பு புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பற்றிய எல்லா உண்மையும் ராதிகாவுக்கு தெரிய வந்ததில் இருந்து ஏகப்பட்ட திருப்பங்கள் . ஒருபக்கம் கோபி வேண்டாம் என்று ராதிகா அடம் பிடிக்கிறார். ஆனால் கோபி ராதிகாவை விடுவதாக இல்லை. இன்னொரு பக்கம் ராஜேஷ் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுத்து பிரச்சனையை பெரிதாக்கினார். இதன் முடிவில் ராதிகா - கோபி திருமணம் உறுதியானது. இதில் விருப்பமில்லாத ராதிகா, மும்பைக்கு செல்ல போவதாக பாக்கியாவிடம் சொல்லிவிட்டார். இந்த விஷயம் கோபிக்கு தெரிந்து, ராதிகாவை சமாதானம் செய்வதில் தீவிரமாக இறங்கி விட்டார்.

    ’பாண்டவர் இல்லம்’ சீரியல் ரசிகர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?

    இதற்கு நடுவில் ராஜேஷ், கோபி வீட்டுக்கு வந்து மிகப் பெரிய இடியை  தலையில் போடுகிறார். அதாவது கோபிக்கு ராதிகாவுடன்  தொடர்பு இருப்பதை  ராஜேஷ்  பாக்கியா வீட்டுக்கு வந்து சொல்ல  ஈஸ்வரி அம்மா, ஜெனி, இனியாவுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. அதற்குள் எழில், ராஜேஷிடம் தனியாக பேச, அப்போது ராதிகா வீட்டில் நடந்த சண்டை வீடியோவை எழில் பார்த்து விடுகிறார்.  எழில் அதிர்ச்சி தாங்க முடியாமல் வீட்டுக்குள் செல்ல, ஈஸ்வரி அம்மா கோபியை பற்றி கேட்டு சண்டை போடுகிறார். இந்த நேரம் வீட்டில் பாக்கியா, கோபி இருவரும் இல்லை.

    கணவன் - மனைவி இனி ஒரே சேனலில்... ஷபானா - ஆர்யன் ஃபேன்ஸ் பயங்கர ஹேப்பி!

    இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான புரமோ வெளியாகியுள்ளது. அதில் ஈஸ்வரி அம்மா எழிலிடம் என்ன பிரச்சனை என கேட்க, ராமமூர்த்தி தாத்தா பொறுமையை இழந்து கோபி பற்றிய எல்லா உண்மையையும் சொல்லி விடுகிறார். கோபிக்கு வேற ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது உண்மை தான் என  கூறியவர் , அதே போல் கோபி நல்லவர் இல்லை எனவும் சொல்லி புயலை கிளப்புகிறார்.



    இதை கேட்டு அழுது துடிக்கிறார் ஈஸ்வரி அம்மா. அதே போல் இனியா, செழியன், ஜெனிக்கும் மிகப் பெரிய ஷாக். அடுத்து என்ன நடக்கும்? பாக்கியாவுக்கு இந்த உண்மை எப்போது தெரிய வரும்? என்பது தான் சீரியலில் முக்கிய கட்டம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி