முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கோபி - ராதிகா உறவு பற்றி தெரிய வந்த உண்மை.. கதறி துடிக்கும் பாக்கியா!

கோபி - ராதிகா உறவு பற்றி தெரிய வந்த உண்மை.. கதறி துடிக்கும் பாக்கியா!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியா எடுக்க போகும் முடிவு தான் சீரியலின் முக்கியமான ட்விஸ்ட்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாக்கியலட்சுமி சீரியலின் ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்த அந்த தருணம் இதோ வந்து விட்டது. பாக்கியா - ராதிகா பற்றிய உண்மையை நேரில் பார்த்து தெரிந்து கொள்கிறார் கோபியின் மனைவி பாக்கியா.

பாக்கியலட்சுமி சீரியல் மிகப் பெரிய திருப்பத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. ஒருபக்கம் கோபி பற்றிய உண்மை மொத்த குடும்பத்திற்கும் தெரிந்து விட்டது. கோபிக்கு வேற ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை ராஜேஷ் வந்து சண்டை போட்ட பின்பு ராமமூர்த்தி தாத்தா எல்லோரிடமும் சொல்லி விடுகிறார்.  இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் இனியா அழுது கொண்டே வெளியே போனார். இன்னொரு பக்கம் பாக்கியா வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார். மகனின் உண்மை முகத்தை ஏற்றுக் கொள்ள முடியாத ஈஸ்வரி அம்மா ஃபோன் செய்து கோபியிடம் பேச அவர் வேக வேகமாக காரில் கிளம்பி வருகிறார்.

மெளன ராகம் சீரியலில் சத்யா - வருணை சேர்த்து வைக்க போவது இவர் தானா?

வரும் வேகத்தில் கோபியின் கார் விபத்தில் சிக்க, ஆஸ்பிட்டலில் இருந்து ராதிகா, பாக்கியா  இருவருக்கும் ஃபோன் போகிறது. இருவரும் பதறி போய் ஓடி வருகிறார்கள். இது நேற்றைய எபிசோட் அப்டேட். வரும் வாரத்திற்கான எபிசோடு புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதாவது கோபி - ராதிகா பற்றிய உண்மை பாக்கியாவுக்கு தெரிய வருகிறது.

' isDesktop="true" id="766167" youtubeid="f1biUJQubro" category="television">

ராதிகாவிடம் கோபி பேசி கொண்டிருப்பதை பாக்கியா கேட்டு விடுகிறார். கோபி ராதிகாவின் கையை பிடித்து ”நீ என்னை விட்டு போனால் நான் செத்து விடுவேன்” என்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியில் உறைகிறார் பாக்கியா. கதறி துடிக்கிறார். ரசிகர்களும் புரமோவை பார்த்து ஆவலுடன் எபிசோடுக்காக காத்திருக்கின்றனர்.

அடுத்து பாக்கியா எடுக்க போகும் முடிவு தான் சீரியலின் முக்கியமான ட்விஸ்ட். வரும் வாரத்தில் இந்த எபிசோடு ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Vijay tv