Home /News /entertainment /

கோபி விஷயத்தில் அந்த முடிவை எடுக்கும் பாக்கியா! அதிர்ச்சியில் குடும்பம்

கோபி விஷயத்தில் அந்த முடிவை எடுக்கும் பாக்கியா! அதிர்ச்சியில் குடும்பம்

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

கோபி மீது கோபம் இதில் பாக்கியா என்ன முடிவு  எடுக்க போகிறார் ?

    பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சி தருகிறார் பாக்கியா. இத்தனை ஆண்டுகளாக குடும்பத்திற்காக வாழ்ந்தவர் தற்போது தனக்காக வாழ முடிவு எடுக்கிறார்.

    பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது  கோபிக்கு சோக காலம். ராதிகாவும் சரி, பாக்கியாவும் சரி கோபியை வெறுத்து விட்டனர். அதற்கு காரணம், இருவரிடமும் கோபி நாடகம் ஆடியது தான். ராதிகா - கோபி பற்றிய உறவு பாக்கியாவுக்கு தெரிய வர குடும்பத்தில் பிரச்சனை வெடிக்கிறது. இப்போது பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவரை சமாதானம் செய்ய அனைவரும் முயற்சி செய்கின்றனர் ஆனாலும் பாக்கியா கோபத்தில் இருந்து  இறங்கவில்லை. இதற்கு பாக்கியா மீது எந்த தப்பும் சொல்ல முடியாது.

    வருண் - சக்திக்கு வில்லனாகும் தருண்? மெளன ராகம் சீரியலில் அடுத்து வரும் அதிரடி திருப்பம்!

    இப்படி இருக்கையில் வீட்டில் இருக்கும் அனைவரும் பாக்கியா மீண்டும் வீட்டுக்கு வர வேண்டும் என நினைக்கின்றனர். அந்த வகையில் இன்று கோபியின் அப்பா  ராமமூர்த்தியும் மூத்த மகன் செழியனும் பாக்கியாவை பார்க்க வருகின்றனர். வீட்டில் அம்மா இல்லாமல் இனியா அழுதுக் கொண்டே இருப்பதால் இந்த முடிவை இருவரும் எடுக்கின்றனர். பாக்கியாவிடமும் வந்து பேசுகின்றனர். ஆனாலும் பாக்கியா வீட்டுக்கு வருவதக இல்லை என உறுதியாக கூறிவிட்டார். அதே சமயம் இனியாவை நினைத்து கவலைக் கொள்கிறர்.

    4 மணி நேரம்.. செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு முக்கியமான அறிவிப்பு!

    தனது முடிவில் தவறு இருக்குமோ என கலங்குகிறார். ஆனால அன்பு மகன் எழில் அவரை தேற்றுகிறார். உன் முடிவில் நீ தைரியமாக இரு என நம்பிகையாக சொல்கிறார். ஒரு பக்கம் இனியா  மீது பாசம், மறுபுறம் கோபி மீது கோபம் இதில் பாக்கியா என்ன முடிவு  எடுக்க போகிறார் என்பது தான் ஹலைட். நாளைய எபிசோடில் கோபி வந்து பாக்கியாவிடம் பேச போகிறார்., அதற்கு தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் வெயிட்டிங்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி