ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாக்கியலட்சுமி சீரியலின் வெற்றிக்கு காரணமே இந்த 2 ஆண்கள் தான்!

பாக்கியலட்சுமி சீரியலின் வெற்றிக்கு காரணமே இந்த 2 ஆண்கள் தான்!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி புரமோவில் கூட எழில், அமிர்தாவை காதலிக்கும் மொத்த உண்மையையும் அமிர்தாவின் மாமியார் - மாமனாரிடம் சொல்வது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் பெண்களுக்கான சீரியல் என்றாலும் கூட இதில் வடிவமைக்கப்பட்டுள்ள 2 ஆண் கதாபாத்திரங்கள் தான் இந்த சீரியலின் வெற்றிக்கு காரணமானவர்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இல்லத்தரசிகளின் மத்தியில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. குடும்பதிற்காக தனது ஆசை,தேவை, சந்தோஷங்களை மறந்துவிட்டு வாழும் ஒவ்வொரு இல்லத்தரசிகளின் கதையாக தான் இந்த பாக்கியலட்சுமி சீரியல் பார்க்கப்படுகிறது.

  இதில் பாக்கியாவாக நடிக்கும் நடிகை சுசித்ராவை ரசிகர்கள் தூக்கி கொண்டாடி வருகிறார்கள். அதே போல் அவரின் கணவர் கோபியாக நடிக்கும் சதிஷை திட்டி தீர்ப்பார்கள். மனைவியை ஏமாற்றி காதலியுடன் ஊர் சுற்றும் கணவர், பிள்ளைகளிடம் பொய் சொல்லிவிட்டு நல்லவராக நடிப்பது போல்  கோபி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இப்படி இருக்கையில், இதே சீரியலில் தான் பெண்களை மதிக்கும், அம்மாவுக்கு துணையாக நிற்கும் சிறந்த மகன் கதாபாத்திரமாக எழில் ரோல் வடிவமைப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் ஐஸ்வர்யாவை பார்த்து பொறாமை படும் மீனா!

  பாக்கியாவுக்கு அடுத்தப்படியான இந்த சீரியலை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்ப்பது இவர்களுக்காக தான் என்றால் அது மிகையாது. அதே போல் இந்த சீரியலில் இளைஞர்களை கவரும் வகையில் காதல் டிராக்கும் அதிக வரவேற்பு பெற்று இருக்கிறது. ஏற்கெனவே திருமணம் ஆகி, கணவரை இழந்த அமிர்தா என்ற பெண்ணை தான் எழில் காதலிக்கிறார். இப்படி ஒவ்வொரு படைப்பிலும் இயக்குனர் ரசிகர்களிடம் அப்ளாஸ்களை அள்ளுகிறார்.

  இன்று வெளியாகியுள்ள பாக்கியலட்சுமி புரமோவில் கூட எழில், அமிர்தாவை காதலிக்கும் மொத்த உண்மையையும் அமிர்தாவின் மாமியார் - மாமனாரிடம் சொல்வது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அமிர்தாவை காதலிப்பதாக ஏற்கெனவே எழில் சொல்லி விட்டார். ஆனால் அந்த காதலை அமிர்தா நிராகரித்து விட்டார்.

  பிக்பாஸ் வீட்டில் கண்ணீர் விட்டு அழுத சஞ்சீவ்.. காரணமான அக்கா சிந்து இவர் தான்!

  இதனால் மனமுடைந்த எழில் மொத்த குடும்பத்தினரிடமும் இந்த உண்மையை சொல்லி விடுகிறார். 2 வெவ்வேறு ஆண் கதாபாத்திரங்களை வைத்து இல்லத்தரசிகளின் கதையை முன்னிலைப்படுத்தி அதில் ஜெயித்தும் காட்டியுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் இயக்குனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv