Home /News /entertainment /

கோபி - ராதிகா கல்யாணம் நிற்க போகிறதா? பாக்கியலட்சுமியில் வர போகும் பரபரப்பு ட்விஸ்ட்!

கோபி - ராதிகா கல்யாணம் நிற்க போகிறதா? பாக்கியலட்சுமியில் வர போகும் பரபரப்பு ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

கோபி - ராதிகா கல்யாணம் கடைசி நேரத்தில் நின்று விடும் என கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாக்கியலட்சுமி சீரியலில் கோபி - ராதிகா கல்யாணத்தை நிறுத்த களத்தில் இறங்குகிறார் கோபியின் அப்பா ராமமூர்த்தி. இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

    கோபி - ராதிகா திருமணம் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. அந்த திருமணத்தில் சமைக்க போவது பாக்கியா தான். இது பாக்கியாவுக்கே தெரியாது. இப்படி இருக்கையில் கோபி தனது அம்மா ஈஸ்வரியிடம் கல்யாணம் பற்றி கூறி சம்மதம் வாங்க நினைக்கிறார். ஆனால் அவர் கோபியை கண்டப்படி திட்டி விட்டு அந்த விஷயத்தை தனது கணவர் ராமமூர்த்தியிடம் சொல்கிறார். நேற்றைய எபிசோடில் ராதிகா வீட்டுக்கு இனியாவை அழைத்து சென்று ஐஸ் வைக்கிறார் கோபி.  இனியாவை எப்படியாவது திருமணத்திற்கு வர வைக்க வேண்டும் என்பது தான் கோபியின் எண்ணம். புது ட்ரெஸ் எடுத்து கொடுத்து ராதிகாவை பற்றி பெருமையாக பேசுகிறார்.

    சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் அதுதான் உண்மை! ரகசியம் சொன்ன பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை!

    ஈஸ்வரி அம்மாவுக்கு கோபி - ராதிகா திருமணம் பற்றி தெரியும் என்பதால் அவர் எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என நினைக்கிறார். இந்நிலையில், ராமமூர்த்தி கல்யாணத்தை நிறுத்த களத்தில் இறங்குகிறார். அவர் கோபியை கோயிலில் சந்தித்து பேசுகிறார். பாக்கியா நிலைமையை பற்றி எடுத்து சொல்கிறார். ஆனால் கோபி யார் நினைத்தாலும் இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது என்கிறார். ஆனால் கோபியின் அப்பா, நான் நிறுத்துவேன் என சபதம் போடுகிறார்.



    கோபி - ராதிகா திருமண எபிசோடு வரும் வாரத்தில் ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது. இணையத்தில் உலா வரும் தகவலின் படி கோபி - ராதிகா கல்யாணம் கடைசி நேரத்தில் நின்று விடும் என கூறப்படுகிறது. அதுவும் ராமமூர்த்தி தான் கடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்துவார் என தெரிகிறது.அது எப்படி? என்பது சஸ்பென்ஸாக  வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களும் அந்த ட்விஸ்டுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி