பாக்கியலட்சுமி சீரியலில் அதிரடி திருப்பம். ராதிகாவுடன் கோபி காரில் செல்வதை எழில் பார்த்து விடுகிறார். இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.
ஸ்டார் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நாளுக்கு நாள் அதிரடியான பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. கோபியின் கள்ளக்காதலுக்கு முடிவே இல்லையா? என்பது போல் கதை பயணித்துக் கொண்டிருக்க, ஒவ்வொரு முறையும் கோபி எஸ்கேப் ஆகி விடுகிறார். இதுவரை கோபியை ராதிகாவுடன் 3 பேர் பார்த்துள்ளனர். கோபியின் அம்மா ராமமூர்த்தி, செல்வி அக்கா மற்றும் எழில். இதில் கோபியின் அப்பாவுக்கு மட்டும் தான் அந்த பெண் ராதிகா என்பதும், கோபி அவருடன் நெருக்கமாக பழகி வருவதும் தெரியும். செல்வி மற்றும் எழிலுக்கு அந்த பெண் யார் என்று தெரியாது. ஆனால் கோபி ஒரு பெண்ணுடன் பழகுகிறார் என்பது மட்டுமெ தெரியும்.
BB ultimate : யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற விஜய் டிவி பிரபலம்!
இப்படி இருக்கையில் வீட்டுக்கு தெரியாமல் விவாகரத்து வரை கோபி சென்று விட்டார். விவாகரத்து கிடைத்த உடனே ராதிகாவுடன் திருமணம் என்ற போக்கில் சுற்று வருகிறார். இதற்கிடையில் அடிக்கடி ராதிகா வீட்டில் தங்குவது, பாக்கியாவை காரணம் இல்லாமல் திட்டுவது என கோபியின் அட்டகாசங்கள் எல்லை மீற ரசிகர்கள் கோபி சீக்கிரமாக மாட்ட வேண்டும் என புலம்பி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாக்கியலட்சுமி சீரியல் குறித்த ஹேஷ்டேக் கூட ட்விட்டரில் வைரலானது. அந்த அளவுக்கு இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் கயலுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த அதிர்ச்சி!
இப்படி இருக்கையில், அடுத்த வாரத்திற்கான பாக்கியலட்சுமி சீரியல் புரமோ வெளியாகியுள்ளது. அதில் ராதிகாவுடன் கோபி பிக்னிக் சென்று இருக்கும் அதே இடத்திற்கு தான் எழில் மொத்த குடும்பத்தையும் அழைத்து வருகிறார். ஆடி, பாடி எல்லோரும் சந்தோஷமாக இருக்க, இந்த பக்கம் கோபி மயூ மற்றும் ராதிகாவுடன் சந்தோஷமாக இருக்கிறார். அப்போது தான் இனியா மூலம் கோபிக்கு 2 குடும்பமும் ஒரே இடத்திற்கு பிக்னிக் வந்திருப்பது தெரிய வருகிறது. உடனே எஸ்கேப் ஆக பிளான் போட்ட கோபி, வழக்கம் போல் பொய்களை அள்ளிவிட்டு அங்கிருந்து வேக வேகமாக ராதிகாவை அழைத்து கொண்டு கிளம்பகிறார்.
அந்த நேரம் பார்த்து தான் கோபி வசமாக எழிலிடம் மாட்டிக் கொண்டார். அதாவது கோபி ஒரு பெண்ணை அழைத்து கொண்டு காரில் ஏறுவதை எழில் பார்த்து விட்டார். இனிமேல் தான் சீரியலில் ட்விஸ்டே இருக்கிறது.புரமோவை பார்த்த ரசிகர்கள் அடுத்த வார எபிசோடுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.