Home /News /entertainment /

யாரும் இதை எதிர்பார்க்கல.. பாக்கியலட்சுமி சீரியலில் இனி கோபி மாட்டவே மாட்டார்!

யாரும் இதை எதிர்பார்க்கல.. பாக்கியலட்சுமி சீரியலில் இனி கோபி மாட்டவே மாட்டார்!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

ரசிகர்கள் கோபி மாட்டிக் கொள்ள போகிறார் என நினைத்தனர். ஆனால் அது வெறும் கனவாக முடிந்தது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்னும் சில எபிசோடுகளில் கோபி வசமாக மாட்டிக் கொள்வார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் புரமோ வெளியாகியுள்ளது.

    மனைவி பாக்யாவுக்கு தெரியாமல், தன்னுடைய முன்னாள் காதலியான ராதிகாவுடன் இன்னும் ரொமானஸ் செய்து கொண்டிருக்கிறார் கோபி. இதில் வேடிக்கை என்னவென்றால் ராதிகாவும், பாக்யாவும் தோழிகள். ஆனால், கோபி தான் பாக்யாவின் கணவர் என்று ராதிகாவுக்கு தெரியாது. ராதிகாவின் காதலன் கோபி என்பது பாக்யாவுக்கு தெரியாது. இப்படியே, பல எபிசோடுகள் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. கோபி எப்போது மாட்டுவார்? என்று பாக்யலட்சுமி சீரியல் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். இன்னிக்கு மாட்டிப்பார், நாளைக்கு மாட்டிப்பார் என மாறி மாறி புரமோக்களை வெளியிட்டு சீரியல் ரசிகர்களை குழப்பி வந்தார் சீரியல் இயக்குனர்.

    இதையும் படிங்க.. கடைசி வரை ஸ்ருதிக்கு ஒரு நல்லது கூட நடக்காது போல! மெளன ராகம் சீரியலில் நின்ற கல்யாணம்

    கோபியின் அப்பாவுக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது, ஆனாலும் கூட அவர் இன்னும் வீட்டில் யாரிடமும் இதைப்பற்றி பேசவில்லை. அதே நேரம் தனது மகன் கோபியை வார்னிங் செய்து வந்தார். ராதிகா வீட்டுக்கு போய் அவரையும் திட்டி விடுகிறார். ஆனாலும் கோபி திருந்துவதாக தெரியவில்லை. சீரியலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருப்பதால் ரசிகர்களும் சோர்வடையாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    இதையும் படிங்க.. தாலி சென்டிமென்ட் போதும்.. வெற்றிக்கு தண்டனை வாங்கி தர போகும் அபிநயா!

    இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கோபி ராதிகா திருமண பேச்சு வெளிவருகிறது.கோபிக்கும் இதில் விருப்பம் தான்.இந்நிலையில் பாக்கியாவை விவாகரத்து செய்வது பற்றியும் கோபி தனது நண்பரிடம் பேசி விட்டார். இந்நிலையில் பாக்கியாவின் வீட்டுக்கு வரும் ராதிகா மகள் மயூ, ராதிகாவின் திருமணத்தை பற்றி உலற கோபியின் அப்பாவுக்கு மாப்பிள்ளை கோபி தான் என்று தெரிந்து விட்டது. இதற்கிடையில் ஒருவேளை எல்லோர் முன்னிலையிலும் இந்த உண்மையை சொன்னால் என்ன நடக்கும் எனவும் கனவு கண்டார். அவரின் கனவு நேற்றைய தினம் புரமோவாக வெளியானது. உடனே ரசிகர்கள் கோபி மாட்டிக் கொள்ள போகிறார் என நினைத்தனர். ஆனால் அது வெறும் கனவாக முடிந்தது.



    இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரமோவில் கோபியிடம் சண்டை போடுகிறார் அவரின் அப்பா. இதனால் அவருக்கு நெஞ்சு வலி வந்து மயங்கி விழுந்து விடுகிறார். பதறி அடித்து கொண்டு அனைவரும் அவரை ஆஸ்பிட்டல் தூக்கி செல்கிறனர். அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியான தகவலை கூறுகின்றனர்.அது என்னவென்றால் இனி அவரால் பேச முடியாது. அவருக்கு பக்கவாத குறைபாடு ஏற்பட்டு விட்டது. எனவே உண்மை தெரிந்த அவருக்கும் இந்த நிலைமை என்றால் இனி கோபி வீட்டில் மாட்ட வாய்ப்பே இல்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி