Home /News /entertainment /

உண்மையை சொன்ன கோபி... அதிர்ச்சியில் உறைந்து போன பாக்கியா!

உண்மையை சொன்ன கோபி... அதிர்ச்சியில் உறைந்து போன பாக்கியா!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் தன்னிடம் பேசிய அனைத்து உண்மையும் சொல்லி விடுகிறார்.

    பாக்கியலட்சுமி சீரியலில் கோபி, பாக்கியாவிடம் எழில் பேசியது பற்றி எல்லா உண்மைகளையும் சொல்லிவிடுகிறார். இதனால் பாக்கியா, எழிலிடம் பேசாமல் சண்டை போடுகிறார். அதுமட்டுமில்லை எழிலை கோபியிடம் மன்னிப்பும் கேட்க சொல்கிறார்.

    மிகப் பெரிய ரீச்சில் சென்று கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். கோபியின் காதல், அப்பாவி மனைவி பாக்கியா, மொத்த குடும்பத்தையும் ஏமாற்றும் குடும்ப தலைவன் என சீரியல் மூலம் பல குடும்பங்களுக்கு பாடம் புகட்டி கொண்டிருக்கிறார் இயக்குனர். அதுமட்டுமில்லை, தமிழ் குடும்பங்கள் பாக்கியா சீரியலை கொண்டாடுகின்றனர். சமீபத்தில் ட்விட்டரில் கோபிக்கு எதிராக ட்ரெண்டான ஹாஷ்டேக்குகளே இதற்கு சாட்சி. கோபி ராதிகா திருமணம் குறித்து தினம் ஒரு அப்டேட் ஒருபக்கம் வெளியாகி கொண்டிருக்கிறது.இப்படி இருக்க்கையில் தற்போது சீரியலில் முக்கிய கட்டம், அதாவது கோபி குறித்த உண்மை அவரின் கடைசி மகன் எழிலுக்கு தெரிந்து விட்டது.

    சூப்பர் சிங்கர் பிரியங்காவுக்கு விஜய் டிவி செய்த காரியம்..இது நியாயமே இல்லை என சண்டை போடும் ரசிகர்கள்!

    ஆனால் அந்த பெண் ராதிகா தான் என்பது மட்டும் தெரியாது. அந்த உண்மை பற்றி தெரிந்து இருந்தும், எழிலிடம் கோபியின் அப்பாவும் அதை பற்றி சொல்லவில்லை. இந்நிலையில், கோபி மீது பயங்கர கோபத்தில் இருக்கும் எழில் அவரை, தான் எடுத்து இருக்கும் படத்தின் முதல் காட்சிக்கு வரவேண்டாம் என்கிறார். இதை கோபியால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அதுமட்டுமில்லை இதை அப்படியே ராதிகாவிடம் கூறி சிம்பத்தியும் பெறுகிறார் கோபி.

    பாக்கியாவை பிரிவது குறித்து மனம் திறந்த கோபி… இனியாவின் வேற லெவல் ரியாக்‌ஷன்!

    இப்படி இருக்கையில், நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது. அனைவரும் வீட்டுக்கு வந்தனர். தனது மகன் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்ற ஆதங்கத்தை கோபியின் அம்மா ஈஸ்வரி வெளிப்படுத்துகிறார். அந்த நேரம் பார்த்து கோபி வீட்டுக்கு வர மொத்த குடும்பமும் கோபியிடம் ஏன் வரவில்லை என கேட்கின்றனர்.



    அப்போது கோபி, எழில் தன்னிடம் பேசிய அனைத்து உண்மையும் சொல்லி விடுகிறார். ஆனால் எதற்காக எழில் அப்படி பேசினார் என்ற உண்மையை மட்டும் கூறவில்லை. உடனே பாக்கியாவுக்கு அதிர்ச்சி ஆக, எழில் மீது கோபம் கொள்கிறார். பாக்கியா, எழிலிடம் பேசாமல் சண்டை போடுகிறார். அதுமட்டுமில்லை எழிலை கோபியிடம் மன்னிப்பும் கேட்க சொல்கிறார்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி