Home /News /entertainment /

குடும்பத்திற்காக நல்லவராக மாறும் கோபி? பாக்கியலட்சுமியில் அதிரடி திருப்பம்!

குடும்பத்திற்காக நல்லவராக மாறும் கோபி? பாக்கியலட்சுமியில் அதிரடி திருப்பம்!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி கதை செல்லும் விதத்தை பார்த்தால் கூடிய சீக்கிரத்தில் கோபி திருந்தி விடுவார் போல

    பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் குடும்பத்தினர் தன் மீது வைத்திருக்கும் பாசத்தை நினைத்து தனது தவறை உணர்கிறார் கோபி.

    கோபி பற்றிய எல்லா உண்மையும் தெரிந்த பின்பு பாக்கியா வீட்டை விட்டு சென்று விட்டார். அவருக்கு துணையாக செல்வி அக்காவும் எழிலும் அவருடனே சென்று விட்டனர். பாக்கியா போன சோகம் மொத்த குடும்பத்திற்கும்  இடி விழுந்தது போல் உள்ளது. அப்பா மீது அளவுக்கு அதிகமான பாசத்தை கொட்டும்  இனியா, கோபியை பார்த்து பேசுகிறார். அவரை கண்டப்படி திட்டி விட்டு, இனிமேல் உங்களிடம் பேசவே மாட்டேன் என்கிறார். ஜெனியிடம், அம்மாவை பார்க்க வேண்டும் என கதறுகிறார். அவரை ஜெனி சமாதானம் செய்து தூங்க வைக்கிறார். இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் கோபி  இரவு தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறார்.

    அமீர் சொன்ன வார்த்தையால் தலையில் அடித்துக் கொண்ட பிக் பாஸ் பாவ்னி!

    தன்னால் மொத்த குடும்பத்திற்கும் நிம்மதி போய் விட்டது என நினைத்து கவலை கொள்கிறார். செழியனை வந்து பார்க்கிறார் அவர் வீட்டு வாசலில் கவலையுடன் அமர்ந்து கொண்டிருக்கிறார். இனியா அழும் சத்தம் கேட்கிறது. அம்மா - அப்பா ரூமில் லைட் ஆனில் இருப்பதை பார்த்து அவர்களும் தூங்க வில்லை என்பதை தெரிந்து கொள்கிறார். தன்னால் , ஒருவனின் ஆசையால் மொத்த குடும்பத்திற்கும்  நிம்மதி போய் விட்டது என கஷ்டப்படுகிறார். ரூமூக்கு சென்று படுக்கிறார்.

    கொஞ்ச  நேரத்தில் செழியன் வந்து  கோபி தூங்கி விட்டாரா என பார்த்து ஏசியை ஆன் செய்து விட்டு செல்கிறார். அதே போல் அடுத்த கொஞ்ச நேரத்தில் ஈஸ்வரி அம்மா வந்து கோபிக்கு பெட்ஷீட் போர்த்தி விடுகிறார். ஆக மொத்ததில் தன் மீது மொத்த குடும்பமும் உயிரை வைத்திருப்பதை கோபி உணர்கிறார். இதை தாங்கி கொள்ள முடியாமல் தேம்பி தேம்பி அழுகிறார்.

    பிக் பாஸ் ஓவியாவின் திடீர் முடிவு.. ரசிகர்கள் செம்ம ஹேப்பி!

    இது ஒருபுறம் இருக்க கடைசியாக  வீட்டுக்கு வரும் எழில், பாக்கியா  அம்மாவை நினைத்து பாட்டி, தாத்தாவிடம் வருத்தம் கொள்கிறார். பாக்கியலட்சுமி சீரியல் கதை செல்லும் விதத்தை பார்த்தால் கூடிய சீக்கிரத்தில் கோபி திருந்தி விடுவார் போல. ஆனால் கோபி திருந்தினால் கதையில் சுவாரசியம் குறைந்து விடும். இயக்குனரின் அடுத்த பிளான் என்ன? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி