பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் காலில் விழுந்து சமாதானம் செய்கிறார் கோபி. ஆனாலும் ராதிகா கோபியை ஏற்றுக் கொள்வதாக இல்லை. இப்படி இருக்கையில், ராதிகாவிடம் கோபி அசிங்கப்படுவதை ராஜேஷ் பார்த்து விடுகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பற்றிய உண்மை ராதிகாவுக்கு தெரிந்த பின்பு சீரியலின் கதை ரசிகர்கள் எதிர்பார்த்தை தாண்டி வேறு கோணத்தில் பயணித்து கொண்டிருக்கிறது. பாக்கியாவின் கணவர் தான் கோபி என்ற உண்மைக்கு பிறகு கோபியை வெறுக்கிறார் ராதிகா. அவருடன் பேசுவதில்லை, மயூவையும் பேச கூடாது என கண்டீஷன் போடுகிறார். வீட்டுக்கு வந்தால் துரத்தி விடுகிறார். கோபியோ ராதிகாவை விடாமல் டார்ச்சர் செய்கிறார். இந்த குழப்பத்தில் வீட்டில் கோபியால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ராதிகா சார்பில் அவரின் அம்மா மட்டும் கோபிக்கு ஆதரவாக இருக்கிறார்.
விஜய் டிவி பிரியங்கா வீட்டில் நடந்த சுப நிகழ்வு.. வாழ்த்துக்களை பகிரும் ரசிகர்கள்!
அவர் மயூவை வைத்து ராதிகாவின் மனசை மாற்ற நினைக்கிறார். கோபியை ஏற்றுக் கொள்ளும்படி ராதிகாவை வற்புறுத்துகிறார். ஆனால் ராதிகாவுக்கு கோபி செய்த நம்பிக்கை துரோகத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்றைய எபிசோடில் ராதிகா வீட்டுக்கு போகும் கோபியை அவரின் அம்மா பொறுமையாக இருக்க சொல்கிறார். ராதிகாவுக்கு கோபம் போன பின்பு கல்யாணத்தை பற்றி பேசலாம் என்கிறார்.
COOKU WITH COMALI : கணவரை அழைத்து வந்த போட்டியாளர்.. ஷாக்கான ரசிகர்கள்!
ஆனால் கோபி, ராதிகா என்னிடம் பேசாமல் என்னால் வீட்டில் நிம்மத்தியாக இருக்க முடியவில்லை, ராதிகா - மயூ தான் எனக்கு முக்கியம் என்கிறார். அந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வரும் ராதிகா, கோபி இருப்பதை பார்த்து கோபத்தில் கத்துகிறார். இதன் தொடர்ச்சியாக ராதிகா காலில் விழுந்தும் கெஞ்சுகிறார் கோபி. ஆனால் ராதிகா கேட்பதாக இல்லை. இதை எல்லாம் ராதிகாவின் கணவர் ராஜேஷ் பார்த்து விடுகிறார்.
அடுத்து என்ன நடக்கும்? கோபி பற்றிய உண்மை வீட்டில் இருப்பவர்களுக்கு எப்போது தெரியும்? போன்ற முக்கிய திருப்பங்களுக்காக தான் ரசிகர்கள் வெயிட்டிங்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.