Home /News /entertainment /

எனக்கு ஏன் துரோகம் செஞ்சீங்க? ராதிகாவை திட்டி தீர்க்கும் பாக்கியா!

எனக்கு ஏன் துரோகம் செஞ்சீங்க? ராதிகாவை திட்டி தீர்க்கும் பாக்கியா!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் ராதிகாவை பார்த்து பேசுகிறார் பாக்கியா..

    பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய பரபரப்பு எபிசோடு குறித்த புரமோ வெளியாகியுள்ளது. ராதிகாவை நேரில் சந்தித்து பேசுகிறார் பாக்கியா.

    சின்னத்திரை சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் சக்கை போடு போடும் சீரியல் பாக்கியலட்சுமி. இதில்  ஒவ்வொரு வாரமும் உச்சக்கட்ட ட்விட்ஸ்ட் அரங்கேறி வருகிறது. பாக்கியாவுக்கு கோபி பற்றி எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. பாக்கியாவுக்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் தெரிந்து விட்டது. இப்போது எல்லோரும் கோபி மீது பயங்கர கோபத்தில் உள்ளனர். அவரின் செல்ல மகள் இனியா இனிமேல் கோபியிடம் பேச மாட்டேன் என்று கூறிவிட்டார். பாக்கியாவும் வீட்டை விட்டு வெளியே போய் விட்டார். இப்போது சமையல் செய்யும் குடோனில் தான் பாக்கியா, செல்வி அக்காவுடன் தங்கி இருக்கிறார்.

    ஒருவழியா பாவ்னி - அமீர் வாழ்க்கையில் அது நடக்க போகுது.. குவியும் வாழ்த்துக்கள்!

    எல்லோரும் பாக்கியா எப்போது வீட்டுக்கு வருவார் என காத்துக் கொண்டிருக்கின்றனர். நேற்றைய எபிசோடில் தன்னால் மொத்த குடும்பமும் படும் கஷ்டத்தை பார்த்து கோபி கண்ணீர் விடுகிறார். தனது தப்பை அவர் புரிந்து கொள்ளும் வகையில் கதை பயணித்தது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான பரபரப்பு புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டாக ராதிகாவை பார்த்து பேசுகிறார் பாக்கியா. இந்த தருணத்திற்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் வெயிட்டிங்.



    செல்வி அக்காவும் பாக்கியாவும் ராதிகா வீட்டுக்கு செல்கின்றனர். அங்கு ராதிகாவிடம் "எனக்கு ஏன் துரோகம் செஞ்சீங்க ராதிகா என்று பாக்கியா கேட்கிறார். அப்போது செல்வி அக்கா, எல்லா உண்மையும் எங்களுக்கு தெரியும்" என்கிறார். அப்போது தான் ராதிகாவுக்கு பாக்கியாவுக்கு எல்லா விஷயமும் தெரியும் என்பது புரிகிறது.

    "நான் செய்யவில்லை டீச்சர், நான் உங்களுக்கு துரோகம் பண்ணவில்லை" என அழுது கதறுகிறார்  ராதிகா . பாக்கியா மனதில் இருக்கும் அனைத்தும் கோபத்தையும் கொட்டி தீர்க்கிறார். இது உண்மையா? இல்லை ராதிகா காணும் கனவா? என்பது இன்று இரவு எபிசோடில் தெரிய வரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி