முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / யாராச்சும் மனைவியை இப்படி ஏமாத்துவாங்களா? பாக்கியலட்சுமி கோபியை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!

யாராச்சும் மனைவியை இப்படி ஏமாத்துவாங்களா? பாக்கியலட்சுமி கோபியை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் வழக்கம் போல் கோபி கதாபாத்திரத்தை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

  • Last Updated :

விஜய் டிவி ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் சிறப்பு 3 மணி நேர ஒளிப்பரப்பு நிகழ்ச்சியின் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த புரமோவை பார்த்து பாக்கியாவின் கணவர் கோபியை ரசிகர்கள் திட்டி தீர்க்கின்றனர். இத்தனை நாள் வரை பாக்கியாவை ஏமாற்றி வந்த கோபி, இன்று ஒருபடி மேலே போய் பாக்கியாவை சபையில் வைத்து அசிங்கப்படுத்தவே முடிவு செய்து விட்டார்.

இல்லத்தரசிகளின் மனதுக்கு நெருக்கமான சீரியல் லிஸ்டில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் சிறப்பு 3 மணி நேர ஓளிப்பரப்பு நாளை 6 மணி முதல் 9 மணி வரை ஒளிப்பரப்பாகவுள்ளது. பாக்கியா தனது மகன் எழில் துணையுடன் சொந்தமாக மசாலா பொருட்கள் விற்கும் கடையை தொடங்கி இருக்கிறார். இந்த கடை இத்தனை ஆண்டுகளாக கஷ்டப்பட்ட பாக்கியாவின் உழைப்புக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம். இதை பெரியளவில் பிரபலப்படுத்த எழில் கடை திறப்புக்கு சிறப்பு விருந்தினர்களை அழைக்கிறார். நடிகர் ரஞ்சித் மற்றும் அவரின் மனைவி பிரியராமன் தான் அந்த சிறப்பு விருந்தினர்கள்.

விஜய் டிவியின் மிகப் பெரிய ஹிட் சீரியலின் 2வது பாகம் தயார்! ஹீரோ ஹீரோயின் இவர்கள் தான்

தனது அம்மாவுக்காக எழில் கஷ்டப்பட்டு அவர்களை ஓகே சொல்ல வைக்கிறார்.அவர்களும் பாக்கியாவின் கடை திறப்புக்கு வர சம்மதம் தெரிவிக்கிறார்கள். இந்த விஷயம் கோபியின் காதுக்கு போகிறது. இந்த நேரத்தில் தான் ராதிகா , ஆபீஸில் நடக்கும் சிறப்பு விழாவுக்கு விருந்தினர்களை அழைக்க வேண்டும் என கோபியிடம் உதவி கேட்கிறார். வழக்கம் போல் கோபி மனைவி பாக்கியாவை ஏமாற்றி கடை திறப்பு விழாவுக்கு வருகை தர இருக்கும் ரஞ்சித் மற்றும் பிரியாராமனை ராதிகா ஆபீஸுக்கு போக வைக்கிறார்.இந்த சம்பவங்கள் அனைத்தும் 3 மணி நேர சிறப்பு எபிசோடில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

' isDesktop="true" id="641941" youtubeid="_k02LW8oDc4" category="television">

ரஞ்சித்தும் பிரியா ராமனும் பாக்கியா கடை திறப்புக்கு வருவார்களா? கோபியின் சதித்திட்டம் என்னவாகும்? போன்ற கேள்விகளுக்கு நாளைய எபிசோடு பதில் சொல்லும். இந்த புரமோவை பார்த்த சீரியல் ரசிகர்கள் வழக்கம் போல் கோபி கதாபாத்திரத்தை திட்டி தீர்த்து வருகிறார்கள். புரமோவில் கமெண்ட் செக்‌ஷனில் கோபியை சரமாரியாக திட்டி சீரியல் மீது இருக்கும் ஈடுப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிரியங்கா இடத்தில் சிவாங்கி? விஜய் டிவி எடுத்திருக்கும் முக்கிய முடிவு!

பாக்கியலட்சுமி சீரியலின் மிகப் பெரிய வெற்றிக்கு காரணமே கோபி என்றால் அது மிகையாகாது.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Promo video, TV Serial, Vijay tv