Home /News /entertainment /

கோபியின் டார்ச்சர்... அழுதுக் கொண்டே பாக்யா எடுத்த அதிரடி முடிவு!

கோபியின் டார்ச்சர்... அழுதுக் கொண்டே பாக்யா எடுத்த அதிரடி முடிவு!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

தேவை இல்லாத 'ஃபுட் பாய்சன்' பிரச்சனையால் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு வரை சென்று விட்டார் பாக்யா.

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எந்தவொரு சீரியலும் பாக்கியலட்சுமி அளவிற்கு மக்களின் மனதிற்கு நெருக்கமான கதைக்களத்தை கொண்டிருக்கவில்லை என்றால் அது மிகையாகாது. பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்கள் அந்தந்த கதைக்களங்களுக்கு ஏற்ற சுவாரசியத்தையே கொண்டிருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் சீரியலில் நடிக்கும் ஒரு கதாபாத்திரத்தை நிஜ வாழ்க்கையில் பார்க்கும் போதும் கூட அவரை திட்டி தீர்ப்பதென்பது - அந்த நடிகரின் நடிப்பு திறனுக்கும், குறிப்பிட்ட சீரியலுக்கும் கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும். அப்படியான வெற்றிக்கு உரித்தான கதாபாத்திரம் தான் - 'பாக்கியலட்சுமி' கோபி.

  "பொம்பள சோக்கு கேட்குதா கோபி.. நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் தேவைதானா கோபி" என்று மீம்ஸ் வழியாக குபீர் சிரிப்புகளை கிளப்புவதாக இருந்தாலும் சரி... "கடந்த முறை பாத்ரூம்குள்ள ஓடிப்போய் மறைஞ்சி, தப்பிச்சிட்டான்... இந்த முறை கண்டிப்பா பாக்கியா கிட்ட மாட்டிப்பான் பாரு.!" என்று பெண்களின் கடுகடுப்புகளை கிளப்புவதாக இருந்தாலும் சரி... நம்ம கோபியை அடிச்சுக்க ஆளே இல்லை!

  தேவை இல்லாத 'ஃபுட் பாய்சன்' பிரச்சனையால் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு வரை சென்று வந்து பாக்கியலட்சுமியை வார்த்தைகளால் வெளுத்து வாங்குகிறார் கோபி. சமையல் பிஸ்னஸால் இந்த வீட்டுக்கு ஒரு நல்லதும் நடக்கல, எப்போதும் பிரச்சினை தான் வருது. இதோடு இந்த பிஸ்னஸை நிறுத்திவிடு என்றும் எச்சரிக்கிறார். கோபி மட்டுமல்ல செழியன் மற்றும் இனியாவும் கூட பிஸ்னஸை நிறுத்த சொல்கிறார்கள். அதற்கு ஏற்றாற போலவே, சமையல் ஆபிஸை காலிசெய்ய சொல்லி கேட்கிறார்கள், யாரும் ஆர்டர் கொடுக்க மறுகிறார்கள், மசாலா பொருட்களை கூட வாங்க தயங்குகிறார்கள்.

  இதற்கிடையில், பாக்கியா இன்னமும் சமையல் பிஸ்னஸை கைவிடவில்லை என்கிற மேட்டர் செல்வி வழியாக கோபிக்கு தெரிய வருகிறது. பிறகு என்ன? காட்டு கத்துகத்துகிறார் கோபி; இனிமேல் என்னிடம் நீ பேசாதே.. உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டு வழக்கம் போல தனது அறைக்கு கோபமாக சென்று விடுகிறார். எவ்ளோ அடிச்சாலும் தாங்கும் பாக்கியா, காலையில் எழுந்து கோபிக்கு காபி கொடுக்க மீண்டும் வார்த்தைகளால் கடித்து குதறுகிறார் கோபி.

  பிக் பாஸ் தாமரைச் செல்வி வீட்டிற்கு சென்ற பிரபலம் - லைக்ஸை அள்ளும் புகைப்படம்!

  மனம் உடைந்து போகும் பாக்கியா வேறுவழி இல்லாமல் தன் சமையல் பிஸ்னஸை நிறுத்த முடிவு செய்கிறார். சமைக்கும் இடத்திற்கு சென்று, அங்கிருக்கும் பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு அழுது கொண்டே வீட்டிற்கு திரும்புகிறார். இதோடு எபிசோட் நிறைவடைகிறது.

  நடிகர்களுக்கு அதிக சம்பளம் தருவது தயாரிப்பாளர்களின் விருப்பம் - மணிரத்னம்!

  பாக்கியா சமைத்த சாப்பாட்டில் எந்த பிரச்சினையும் இல்லை என்கிற உண்மை, டிவி வழியாகவோ செய்திதாள் வழியாகவோ வெளிவரவில்லை என்பது தான் இங்கே முக்கிய சிக்கல். அந்த உண்மை பொதுமக்களுக்கு தெரிய வரும் போது பாக்கியாவின் பிஸ்னஸ் தானாக மேலே எழும் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஆனால் அதற்கு யார் உதவி செய்ய போகிறார்கள் என்பது தான் இங்கே ட்விஸ்ட். வழக்கம் போல எழில் உதவி செய்வாரா ? அல்லது சற்றே வித்தியாசமாக ராதிகா உதவி செய்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: TV Serial, Vijay tv

  அடுத்த செய்தி