ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கோபி மீது ராதிகாவுக்கு வந்த சந்தேகம்.. பாக்கியலட்சுமி சீரியலில் புது ட்விஸ்ட்!

கோபி மீது ராதிகாவுக்கு வந்த சந்தேகம்.. பாக்கியலட்சுமி சீரியலில் புது ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

ராதிகாவின் காதலன் கோபி என்பது பாக்யாவுக்கு தெரியாது. இப்படியே, பல எபிசோடுகள் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மீது ராதிகாவுக்கு சந்தேகம் எட்டி பார்க்க தொடங்கியுள்ளது. ஒருவேளை இந்த சந்தேகம் தீவிரம் ஆனால் கோபி மாட்டிக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் திரைக்கதை மின்னல் வேகத்தில் பயணித்து கொண்டிருக்கிறது. ஒருபக்கம் இனியா பள்ளி ஆசிரியர் விவகாரம், மற்றொரு பக்கம் ராதிகா - கோபி கல்யாணம். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் மற்ற சீரியல்களை காட்டிலும் இப்போது பரபரப்பாக சென்று கொண்டிருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாமல் ராதிகா உடன் தொடர்பில் இருக்கிறார் கோபி. கோபியை அவரின் அப்பா வார்னிங் கொடுத்தும் கோபி திருந்துவதாக தெரியவில்லை. பலமுறை சத்தியமூர்த்தி, கோபிக்கு அட்வைஸூம் செய்து விட்டார்.

  இதையும் படிங்க.. சன் டிவியில் பொங்கல் ஸ்பெஷல் மெகாஹிட் திரைப்படம்.. ரசிகர்கள் உற்சாகம்!

  கோபி எப்போது மாட்டுவார்? என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் கோபி பிரச்சனையில் சிக்காமல் இருக்க, பிளான் செய்து ஒவ்வொரு விஷயத்தையும் முடிவு எடுக்கிறார். தனது குடும்பத்துக்கு ராதிகா பற்றிய விஷயம் தெரிந்து விடுமோ என பயத்தில் தான் ஒவ்வொரு நாளும் கோபி லைஃப் நகர்கிறது. இன்னும் எத்தனை நாள் தான் கோபி இப்படியே பயந்து பயந்து ராதிகாவை சந்தித்து பேச போகிறார் என்று தெரியவில்லை.

  இதையும் படிங்க.. சிம்பு படத்தில் பிக் பாஸ் சீசன் 5 பிரபலம்? தீயாய் பரவும் புகைப்படம்!

  இதற்கிடையில் ராதிகா அம்மா, கோபிக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கி விட்டார். சட்டப்படி முதல் திருமணத்தை விவாகரத்து செய்து விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்.ராதிகாவும், பாக்யாவும் நல்ல தோழிகள். ஆனால், கோபி தான் பாக்யாவின் கணவர் என்று ராதிகாவுக்கு தெரியாது. ராதிகாவின் காதலன் கோபி என்பது பாக்யாவுக்கு தெரியாது. இப்படியே, பல எபிசோடுகள் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.

  இப்படி இருக்க, கல்யாணம் என்ற பேச்சு எடுத்த உடனே கோபி எஸ்கேப் ஆகுகிறார். இதனால் ராதிகாவுக்கு கோபி நடவடிக்கை மீது சந்தேகம் வருகிறது. இதனால் கோபியிடம் இதைப் பற்றி மனம் விட்டு பேசுகிறார். ஆனாலும் கோபி உண்மையை சொல்வதாக இல்லை. இதுக் குறித்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, TV Serial Promos, Vijay tv