Home /News /entertainment /

ஆடி போய் நிற்கும் எழில்.. கோபி விஷயத்தில் எடுக்க போகும் அடுத்த முடிவு என்ன?

ஆடி போய் நிற்கும் எழில்.. கோபி விஷயத்தில் எடுக்க போகும் அடுத்த முடிவு என்ன?

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமியில் கோபி பற்றிய முழு உண்மையும் இப்போது எழிலுக்கு தெரிந்து விட்டது.

    பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பற்றி மொத்த உண்மையையும் ராஜேஷ் போட்டு உடைத்து விட்டார். இதை கேட்டு ஆடி போய் நிற்கிறார் எழில். அடுத்து  எழில் என்ன செய்ய போகிறார்? என்பது சீரியலில் வரப்போகும் மிகப் பெரிய ட்விஸ்ட்.

    பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தினம் தினம் புது புது ட்விஸ்டுகளுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. கோபி பற்றிய உண்மை ராதிகாவுக்கு தெரிந்த பின்பு சீரியல் வேறு கோணத்தில் பயணிக்க தொடங்கி விட்டது. கோபியை அடியோடு வெறுக்கிறார் ராதிகா. ஆனால் கோபி, ராதிகா வீட்டிலே தவம் கிடக்கிறார். ராதிகாவின் அம்மா, அண்ணன் கோபிக்கு சப்போர்ட் செய்கின்றனர். ஆனால் ராதிகா டீச்சரை ஏமாற்ற முடியாது என்கிறார். இதற்கிடையில்  ராஜேஷ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க, கடைசியில் கோபியும் ராதிகாவும் திருமணம் செய்து கொள்கிறோம் என  போலீஸ் ஸ்டேஷனில் எழுதி கொடுக்கும் நிலை வந்தது.

    அப்படி போடு! பிக் பாஸ் பிரியங்கா சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வைரல் தகவல்

    இந்நிலையில், ராதிகா பாக்கியாவிடம் மும்பைக்கு செல்ல போவதாக கூறுகிறார். இதை பாக்கியா வருத்ததுடன் கோபியிடம் சொல்கிறார். தனக்கு பின்னாடி இவ்வளவு பெரிய துரோகம் நடப்பது கூட பாக்கியாவுக்கு தெரியாது. இப்படி இருக்கையில், பாக்கியா குடும்பத்துக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருகிறது. அதாவது, ராதிகாவின் முன்னாள் கணவர் ராஜேஷ் கோபி பற்றிய உண்மையை வீட்டுக்கு வந்து எல்லோரிடமும் சொல்கிறார். ஆனால் இதை கோபியின் அம்மா ஈஸ்வரி நம்ப மறுக்கிறார்.

    அந்த நடிகையுடன் 3வது திருமணமா? ஒரே போஸ்டில் விளக்கம் கொடுத்த சூப்பர் சிங்கர் நடுவர்!

    இதுக் குறித்த புரமோ ஏற்கெனவே வெளியாகி இருந்த நிலையில் இன்றைய எபிசோடில் கோபியை சந்தித்து பேசும் ராஜேஷ், அவரிடம் சவால் விடுகிறார். உன்னை பற்றி மொத்த உண்மையையும் கண்டுபிடிக்கிறேன் என்கிறார். கோபியும் முடிந்தால் செய் என ஆவேசமாக பேசுகிறார். இந்த பக்கம் ராதிகாவை அவரின் அம்மாவும் அண்ணனும் சமாதானம் செய்கின்றனர். கோபி - பாக்கியா டைவர்ஸ் வழக்கை நடத்திய லாயரிடமும் ராதிகாவின் அண்ணன் இது பற்றி விசாரிக்கிறார் . அதை குறித்தும் ராதிகாவிடம் சொல்கிறார். ஆனால் ராதிகா இது எல்லாம் கோபியின் நாடகம் என்கிறார்.



    இது ஒரு புறம் இருக்க , ராஜேஷ் இன்று கோபியின் வீடு தேடி வருகிறார். அவரை பார்த்ததும் எழிலும் , ராமமூர்த்தி தாத்தாவும் டென்ஷன் ஆகுகின்றனர். எப்படியாவது அவரை பேச விடாமல் தடுக்க நினைக்கின்றனர். ஆனால் ராஜேஷ் கோபி பற்றி புட்டு புட்டு வைக்க ஈஸ்வரி அம்மா அதிர்சியில் உறைந்து போகிறார். அடுத்து என்ன நடக்கும்? கோபி பற்றிய முழு உண்மையும் இப்போது எழிலுக்கு தெரிந்து விட்டது. பாக்கியா விஷயத்தில் எழில் அடுத்து என்ன முடிவு எடுக்க போகிறார? என்பது தான் பரபரப்பின் உச்சம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி