• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாக்கியலட்சுமி சீரியலில் இவரது கேரக்டர் முடிக்கப்படுகிறதா? திடீர் திருப்பதால் சீரியலில் ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி சீரியலில் இவரது கேரக்டர் முடிக்கப்படுகிறதா? திடீர் திருப்பதால் சீரியலில் ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி சீர்யல்

பாக்கியலட்சுமி சீர்யல்

பாக்கியலட்சுமி சீரியலின் லேட்டஸ்ட் எபிசோட்கள் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றன

  • Share this:
    பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கேரக்டர்களான பாக்கியவாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர்.

    விஜய் டிவி-யில் ப்ரைம் டைமிங் ஸ்லாட்டான இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் விறுவிறுப்பான ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இல்லத்தரசிகளுக்கு ஊக்கம் தரும் வகையில் பல திருப்பங்கள் மற்றும் சுவாரசியங்கள் அடங்கிய பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கேரக்டர்களான பாக்கியவாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகின்றனர். கோபியின் தந்தை ராமமூர்த்தியாக நடிகர் எஸ்டிபி ரோசரி, தாய் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

    பாக்கியலட்சுமி சீரியலின் லேட்டஸ்ட் எபிசோட்கள் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றன. தனது முன்னாள் காதலி ராதிகாவிடம் தான் பழகி வரும் விஷயம் குடும்பத்தினருக்கு எக்காரணம் கொண்டும் தெரிய கூடாது என்று இதுநாள் வரை கோபி செய்து வந்த முயற்சிகள் அனைத்தும் வீணாகியது. புது கார் வாங்கிய ராதிகாவை அழைத்து கொண்டு தனது வீட்டின் அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்ற கோபி, தனது தந்தை ராமமூர்த்தியிடம் வசமாக சிக்கி கொள்கிறார். ஆனால் தந்தையிடம் தான் சிக்கி கொண்ட விஷயம் கோபிக்கு தெரியவில்லை.

    எப்போதும் போல வீட்டிற்குள் நுழையும் கோபியிடம் ராமமூர்த்தி கடுகடுவென்று பேசுகிறார். அப்பா எதற்காக கோபமாகவே பேசி கொண்டிருக்கிறார் என்று புரியாமல் முழிக்கும் கோபி, தூங்க செல்லும் முன் ராதிகாவிடம் போனில் பேசி கொண்டிருக்கிறார், அப்போது அங்கே வரும் ராமமூர்த்தி ராதிகாவுடன் கோபியை பார்த்த தகவலை சொல்லி பாக்கியாவிற்கும், இந்த வீட்டிற்கும் துரோகம் செய்தால் கலஉதறுது உன்னை கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு செல்லவும் தயங்க மாட்டேன் என்று கடுமையாக எச்சரித்து விட்டு செல்கிறார்.

    பின்னர் ராதிகா வீட்டிற்கு சாப்பாடு கொண்டு செல்லும் பாக்கியாவை தடுத்து நிறுத்து அதனை ராதிகா வீட்டிற்கு தானே எடுத்து செல்கிறார் ராமமூர்த்தி. அங்கே ராதிகாவிடம் பேச்சு கொடுக்கும் போது தான் ராமமூர்த்திக்கு தெரிகிறது பாக்கியாவின் கணவர் என்பது தெரியாமலே ராதிகா தனது முன்னாள் காதலன் என்ற வகையில் நட்பாக கோபியிடம் பழகி கொண்டிருப்பது. வார இறுதியில் வந்து ராதிகாவையும், அவரது மகளையும் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி விட்டு புறப்பட்டு செல்கிறார் ராமமூர்த்தி.

    இதனிடையே இந்த தகவலை எதார்த்தமாக கோபியிடம் ராதிகா ஷேர் செய்ய பீதியிலேயே இருக்கிறார் கோபி. எப்படியும் தன் குட்டு ராதிகாவிடம் அல்லது தன் குடும்பத்தினரிடம் வெளிப்பட்டுவிடும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க, ராதிகாவிடம் உண்மையை கூறுவதற்கு முன் ராமமூர்த்தி விபத்தில் சிக்கி இறந்து விடுவதை போல அடுத்து வரும் எபிசோட்கள் ஒளிபரப்பாக உள்ளதாக சில தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த தகவல் உண்மையா அலல்து ரசிகர்களின் யூகத்தால் பரவி வரும் வதந்தியா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: