ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கோபி - ராதிகா கல்யாணத்தை நிறுத்த வரும் ராமமூர்த்தி.. கண்ணீரில் பாக்கியா!

கோபி - ராதிகா கல்யாணத்தை நிறுத்த வரும் ராமமூர்த்தி.. கண்ணீரில் பாக்கியா!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல் கோபியை திட்டி தீர்க்கின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாக்கியலட்சுமி சீரியலில் கோபி - ராதிகா கல்யாணத்தை நிறுத்த மண்டபத்திற்கு ஆவேசமாக வருகிறார் கோபி அப்பா ராமமூர்த்தி. இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

  பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி - ராதிகா திருமண எபிசோடுகள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. இந்த திருமணத்தில் தான் பாக்கியாவும் சமைக்க வந்துள்ளார். இந்த கல்யாணம் கோபி, ராதிகாவுடையது என்பது பாக்கியாவுக்கு தெரியாது. தொழிலதிபர் ராஜேசேகர் மண்டபத்தில் சமையல் வேலை என்று தான் பாக்கியா வருகிறார். அதே போல் கோபி - ராதிகாவுக்கும் இங்கு பாக்கியா சமைக்க வந்து இருக்கும் விஷயம் தெரியாது. ஒருபக்கம் கோபியின் அப்பா ராமமூர்த்தி எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்த போராடிக் கொண்டிருக்கிறார்.

  வேற மாதிரி லுக்கில் மகாலட்சுமி - ரவீந்தர்.. என்ன விஷயம் தெரியுமா?

  இதன் தொடர்ச்சியாக பொறுமை இழக்கும் அவர் நேராக கல்யாண மண்டபத்திற்கு செல்கிறார். இந்த காட்சிகள் புரமோவில் இடம்பெற்றுள்ளன. கோபத்துடன் மண்டபத்திற்கு வரும் ராமமூர்த்தி தாத்தா, கோபியிடம் சண்டை போட்டு கல்யாணத்தை நிறுத்து என்கிறார். ஆனால் கோபி அப்பா என்பதை மறந்து வாயா, போயா என ஒருகாமையில் பேசி அவரை கீழே தள்ளி விடுகிறார். அந்த இடத்தில் பாக்கியாவும் நிற்கிறார். பின்பு பாக்கியா கோபியின் அப்பாவை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து செல்கிறார்.

  ' isDesktop="true" id="810168" youtubeid="xT23BKqZizc" category="television">

  புருஷன் கல்யாணத்தில் பொண்டாட்டி சமைப்பது எல்லாம் கொடுமை என புலம்பி கொண்டு பாக்கியாவை வீட்டு வா என்கிறார் கோபியின் அப்பா.  ஆனால் பாக்கியா நான் எடுத்த சமையல் ஆர்டரை முடிக்காமல் இங்கிருந்து வர மாட்டேன் என்கிறார். என் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வருகிறேன என்று தைரியமாக கூறுகிறார். இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல் கோபியை திட்டி தீர்க்கின்றனர். பாக்கியாவின் தைரியம், சுயமரியாதை ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv