Home /News /entertainment /

Baakiyalakshmi serial : ஆட்டத்தை ஆரம்பித்த கோபி.. ராதிகா சொல்ல போகும் பதில் என்ன?

Baakiyalakshmi serial : ஆட்டத்தை ஆரம்பித்த கோபி.. ராதிகா சொல்ல போகும் பதில் என்ன?

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

ராதிகாவின் மனசை மாற்ற கோபி தற்கொலை முயற்சி வரை செல்வார் எனவும் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் மீண்டும் ஆட்டத்தை தொடங்குகிறார் கோபி. ராதிகாவை தேடி போய் சமாதானம் பேசி கல்யாணத்திற்கு பிளான் செய்கிறார்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் மற்ற எல்லா சீரியல்களையும் டி.ஆர்.பியில் ஓரங்கட்டியுள்ளது பாக்கியலட்சுமி சீரியல். கோபி வீட்டில் மாட்டியதில் இருந்து தினம் தினம் சீரியலில் எதிர்பார்க்காத ட்விஸ்ட் . பாக்கியா - கோபி டைவர்ஸ், கோபியை பாக்கியா வீட்டை விட்டு துரத்தியது என ரசிகர்கள் எதிர்பார்க்காத திருப்பங்கள் அரங்கேறுவதால்  ரசிகர்கள் ஆர்வம் குறையாமல் சீரியலை பார்த்து வருகின்றனர். நேற்று நடு தெருவுக்கு வந்த கோபி தனது தப்பை உணராமல் எல்லாத்துக்கும் பாக்கியா தான் காரணம் என்கிறார். இதே விவாகரத்தை கோபி, பாக்கியாவுக்கு தந்து இருந்தால் அது வேறு.

    பாண்டியன் ஸ்டோர்ஸில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

    ஆனால் பாக்கியா கோர்டுக்கு சென்று விவாகரத்து தந்தது கோபியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த கோபத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார். கடைசியில் வீட்டை  விட்டு வெளியே வந்து விட்டார். இந்த பிரச்சனையிலும்  ராதிகாவை தேடி சென்று அங்கு நடிப்பை தொடங்குகிறார். அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு பாக்கியா தன்னை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக அடுத்த கதையை தொடர்கிறார்.

    அடுத்த லெவலுக்கு சென்ற சூப்பர் சிங்கர் பிரியங்கா! விஷயம் தெரியுமா?

    பின்பு ராதிகா, மயூ ஞாபகத்திலே இருந்ததாக கூறி கண்ணீர் விடுகிறார். இப்படி நடுத்தெருவில் நிற்க காரணமே உன் மீது கொண்ட காதல் தான் என ராதிகாவை உருக வைக்கிறார். இதை எல்லாம் ஒரு பக்கம் ராதிகாவின் அண்ணன் நின்று வேடிக்கை பார்க்கிறார். ராதிகா சொல்லப்போகும் முடிவில் தான் சீரியலின் அடுத்த கட்டமே உள்ளது.



    ஏற்கெனவே இணையத்தில் உலா வரும் தகவலின் படி ராதிகாவின் மனசை மாற்ற கோபி தற்கொலை முயற்சி வரை செல்வார் எனவும் கூறப்படுகிறது. அடுத்து என்ன நடக்கும்? கோபியை ராதிகா ஏற்றுக் கொள்வாரா? என பல கேள்விகளுக்கு வரும் வாரங்களில் பதில் கிடைக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி