ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கோபிக்கு கல்யாணம்.. சமைக்க கிளம்பிய பாக்கியா! பரபரப்பான திருப்பத்தில் பாக்கியலட்சுமி

கோபிக்கு கல்யாணம்.. சமைக்க கிளம்பிய பாக்கியா! பரபரப்பான திருப்பத்தில் பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

திருமண மண்டபத்தில் பாக்கியாவை கோபியும் ராதிகாவும் சந்திப்பார்கள் என தெரிகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாக்கியலட்சுமி சீரியலில் கோபி - ராதிகா திருமண எபிசோடுகள் அடுத்த வாரம் ஒளிப்பரப்பாகவுள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த தருணத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

  இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து கோபியின் ஒரே ஆசை ராதிகாவை கல்யாணம் செய்வது. இதற்காக கோபி ஆடிய நாடகம் ஒண்ணு ரெண்டு இல்லை. ஏகப்பட்ட பொய்கள், திருட்டுத்தனம் என செய்வதவர் கடைசியாக ராதிகாவை திருமணம் செய்ய போகிறார். அதுவும் ராதிகா நினைத்தப்படியே பாக்கியாவை முறைப்படி விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை 2வது மனைவியாக ஏற்க போகிறார். இந்த பரபரப்பு எபிசோடுகள் சீரியலில் அடுத்த வாரத்தில் டெலிகாஸ்ட் ஆகவுள்ளன.

  இவ்வளவு சீக்கிரமா மாட்டிக்கிட்டீங்களே ஆதி.. என்ன செய்ய போகிறார் சந்தியா?

  இன்றைய எபிசோடில் கோபியும் ராதிகாவும் மண்டபத்திற்கு கிளம்புகின்றனர். அதே போல் பாக்கியாவும் சமையல் ஆர்டருக்காக கிளம்புகிறார். வீட்டில் ஈஸ்வரி அம்மாவால் அமைதியாக இருக்க முடியவில்லை. ராமமூர்த்தியிடம் புலம்பி அழுகிறார். அவரும் கோபியை பார்த்து பேச முடிவு எடுக்கிறார். இதன்படி கோபிக்கு ஃபோன் செய்கிறார். பக்கத்தில் இருக்கும் கோயிலுக்கு வரச்சொல்கிறார். கோபியும் கிளம்பி போகிறார். தனது மகனிடம் கெஞ்சி கல்யாணம் வேண்டாம் என்கிறார் ராமமூர்த்தி. ஆனாலும் கோபி முடிவை மாற்றிக் கொள்வதாக இல்லை. இந்த கல்யாணம் நடந்தே தீரும் என்கிறார்.

  வள்ளி திருமணம் சீரியலில் முக்கிய திருப்பம்.. வசுந்தரா பற்றி தெரிய வரும் உண்மை!

  கோபியின் அப்பாவும் பதிலுக்கு இந்த கல்யாணத்தை நிறுத்துகிறேன் என சபதம் போடுகிறார். இனிமேல் பாக்கியா என் வாழ்வில் இல்லை என தெளிவாக சொல்லிவிட்டு கிளம்புகிறார் கோபி. அடுத்த வாரத்தில் திருமண மண்டபத்தில் பாக்கியாவை கோபியும் ராதிகாவும் சந்திப்பார்கள் என தெரிகிறது. அதுமட்டுமில்லை கோபியின் கல்யாணம் நடக்குமா? இல்லை கடைசி நேரத்தில் ஈஸ்வரி அம்மாவும் ராமமூர்த்தியும் கல்யாணத்தை நிறுத்தி விடுவார்களா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv