• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • எனக்கு லேடிஸ் கிட்ட பேசவே பிடிக்காது..ஒரே போடு போட்ட பாக்கியலட்சுமி கோபி!

எனக்கு லேடிஸ் கிட்ட பேசவே பிடிக்காது..ஒரே போடு போட்ட பாக்கியலட்சுமி கோபி!

பாக்கியாவின் கணவராக வரும் கோபியின் நடிப்பிற்கும் ரசிகர்கள் அதிகம்

 • Share this:
  பாக்கியலட்சுமி சீரியலில் வர வர கோபியின் அட்ராசிட்டி எல்லை மீறி சென்றுக் கொண்டிருக்கிறது. இதனால் டி.ஆர்.பியிலும் நல்ல ரேட்டிங்.

  விஜய் டிவியில் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் ஆல் டைம் ஃபேவரெட் சீரியலாக உள்ளது. சரியாக படிக்காத குடும்பத்தலைவி, தன் குடும்ப உறுப்பினர்களுக்காக செய்யும் தியாகங்கள், படும் கஷ்டங்கள் மற்றும் அவமானங்கள் உள்ளிட்டவை தான் இந்த சீரியலின் ஒன்லைன். கணவன், தோளுக்கு மேல் வளர்ந்த 3 பிள்ளைகள், ஒரு மருமகள் மற்றும் மாமனார் & மாமியார் உள்ளிட்டோரை தனி ஒரு ஆளாக கவனித்து கொண்டு சுயதொழில் செய்யும் முயற்சியில் போராடி வரும் தாயாக பாக்கியா இருக்கிறார்.

  குறிப்பாக பாக்கியவாக நடிக்கும் நடிகை சுசித்ராவை மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் சக அம்மாவாக, மாமியாராக, மருமகளாக பார்க்க தொடங்கினர். சீரியல் என்றாலே பெண்கள் தான் அதிகம் பார்ப்பார்கள் என்ற பேச்சும் உண்டு. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலை ஏராளமான பெண்களே விரும்பி பார்க்க தொடங்கினர். குடும்பத்திற்காகவே வாழும் பாக்கியாவை கணவர் கோபி, முதல் மகன் செழியன் எல்லோரும் ஏமாற்றுகின்றனர். ஆனாலும் தனக்கான அடையாளத்தை தேடி கொள்ள நினைத்து சமையல் ஆர்டர், மசாலா பொடி விற்பது போன்ற சுயதொழிலை செய்து வருகிறார்.

  உதவி செய்த கண்ணனை மறந்த குடும்பம்... குழந்தை முகத்தை காட்டினால் மட்டும் போதுமாம்?

  சரியாக படிக்காத ஒரு குடும்பத்தலைவி, கணவர் உட்பட குடும்ப உறுப்பினர்களிடம் படும் நிறைய அவமானங்களை தாண்டி தன் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி முன்னேறுகிறார் என்பதை மையக்கருவாக கொண்டு  சீரியல் நகர்ந்து வருகிறது.
  பாக்கியாவின் கணவராக வரும் கோபியின் நடிப்பிற்கும் ரசிகர்கள் அதிகம். தான் காதலித்த பெண்ணான ராதிகாவை சந்தித்த பின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தெரியாமல் அவர் செய்யும் தகிடுதத்த வேலைகள் காரணமாக பல எபிசோட்கள் விறுவிறுப்பாக செல்கின்றன. கோபி கூடிய விரைவில் ராதிகா அல்லது பாக்கியாவிடம் மாட்டிக் கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், இன்றைய எபிசோடில் இனியா ராதிகாவுடன் பிக்னிக் செல்ல தயாராகிறாள்.  இந்த பிக்னிக் பிளானை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதே கோபியின் கோலாக இருந்தது. ஆனால் கடைசி வரை கோபியால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் பிக்னிக் செல்லும் இனியா, ராதிகா வீட்டில் கோபியை காரில் டிராப் செய்யுமாறு தொந்தரவு செய்கிறாள். கோபியின் அம்மா அப்பாவும் இனியாவை ராதிகா வீட்டில் விடுமாறும் கோபியிடம் வற்புறுத்துகிறார்கள். இதனால் கோபி தனக்கு லேடிஸ்யிடம் பேசி பழக்கமே இல்லை, அதுவும் ராதிகா வீட்டுக்கு எல்லாம் போக முடியாது என அந்நியாயத்திற்கு நல்லவர் போல் நடிக்கிறார். இந்த புரமோவும் தற்போது வெளியாகியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: