ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாக்கியாவுக்கு மிகப் பெரிய துரோகத்தை செய்யும் ராதிகா!

பாக்கியாவுக்கு மிகப் பெரிய துரோகத்தை செய்யும் ராதிகா!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா இப்படி ஒரு துரோகத்தை செய்து இருப்பது பாக்கியாவுக்கு தெரிய வந்தால் அவர் தாங்குவாரா?

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியை திருமணம் செய்து கொள்வேன் என போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போடுகிறார்.

  பாக்கியலட்சுமி சீரியலில் கோபி - ராஜேஷ் இடையில் ஏற்பட்ட மோதல் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. ராதிகாவை அசிங்கப்படுத்த, மயூவை அவரிடம் இருந்து பிரிக்க போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறார் ராஜேஷ். இதனால் போலீஸ் ராதிகாவை ஸ்டேஷனுக்கு வர சொல்கிறார்கள். ராதிகாவும் தனது அம்மா, அண்ணனுடன் செல்கிறார். விஷயம் தெரிந்து கோபியும் ஓடி வருகிறார். ராஜேஷ் கொடுத்த புகாரின் அடைப்படையில் போலீஸ் மூவரிடமும் விசாரிக்கின்றனர்,.இதற்கு இடையில் வீட்டில் தனியாக இருக்கும் மயூவை பாக்கியா தான்  பாசமாக பார்த்துக் கொள்கிறார்.

  பெண் குழந்தை பிறந்தது.. ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ் சொன்ன ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தாமரை!

  போலீஸ் ஸ்டேஷனில் கோபி, ராதிகாவும்  நானும் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்கிறார். இதை ராஜேஷ் மறுக்கிறார். ராதிகா அமைதியாக இருப்பதால் போலீஸ் அவரை மீண்டும் மீண்டும் கேட்கின்றனர். ஆனால் ராதிகா ஆம் என சொல்ல தயக்கம் காட்டுகிறார். ஏனென்றால் கோபி பற்றிய உண்மை தெரிந்த பிறகு அவரால் கோபியை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஆனால் இந்த பிரச்சனை முடிய வேண்டும் என்றால்  ராதிகா அப்படி சொன்னால் தான் தப்பிக்க முடியும் என்கிறார் அவரின் அம்மா.

  கடைசியில் அண்ணன், அம்மா பேச்சை கேட்டு ராதிகா சம்மதம் சொல்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் இன்னும் சில மாதங்களில் நானும் கோபியும் திருமணம் செய்து கொள்வோம் என எழுதி அதில் கையெழுத்து போட்டு தருகிறார். ராதிகாவுக்கு இதில் விருப்பம் இல்லை. ஆனால் தலைவர் கோபி பயங்கர ஹேப்பி. மீண்டும் ராதிகாவுடன் சேர போகிறோம் என கனவு காண்கிறார்.

  சத்யாவுடன் சேர துடிக்கும் வருண்.. வில்லியாக மாறி பிரிக்கும் ஸ்ருதி!

  கோபத்தில் வீட்டுக்கு போகும் ராதிகா பாக்கியாவை பார்த்து ஷாக் ஆகுகிறார். அவரால் குற்றணர்ச்சியில் பாக்கியாவிடம் பேச முடியவில்லை. ராதிகா இப்படி ஒரு துரோகத்தை செய்து இருப்பது பாக்கியாவுக்கு தெரிய வந்தால் அவர் தாங்குவாரா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால்  கோபி காட்டில் அடை மழை போல் ராதிகாவின் அம்மாவும் அவரின் அண்ணனும் கோபி பக்கம் நிற்கின்றனர். அடுத்து என்ன செய்வார் ராதிகா? மனம் மாறி கோபியை ஏற்றுக் கொள்வாரா?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv