ராமநாதபுரம் டூ சென்னை.. சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் ஜெனிக்கு நிறைவேறாத ஆசைகள் ஏராளம்!

பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி

இருவரும் பிரஸ் மீட் ஒன்றை வைத்து விரைவில் தாங்கள் திருமணம் ஒன்றை கூறி இருந்தார்கள்.

 • Share this:
  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனிபராக நடிப்பவர் திவ்யா கணேஷ். இவர் குறித்து பலரும் அறியாத தகவல்கள் இதோ..

  சன் டிவி-யில் ஒளிபரப்பான, ‘கேளடி கண்மணி’ சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையான திவ்யா, அதன் பிறகு சுமங்கலி, மகராசி ஆகிய சீரியல்களிலும் நடித்தார். இப்போது விஜய் டிவி-யின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். மாமியார் பாக்கியாவுக்கு துணையாக நிற்கும் ஜெனிக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ்கள். ஆரம்பத்தில் இவருக்கும் செழியனுக்குமான காதல் காட்சிகள், கல்யாணம் ஆகியவை ரசிகர்களை பெருமளவில் ஈர்த்திருந்தது. இப்போது ஜெனி போல் ஒரு மருமகள் இருந்தால் போதும் என்கிறார்கள் இல்லத்தரசிகள்.

  ராமநாதபுரத்து பெண்ணான திவ்யா, வளர்ந்தது படித்தது எல்லாம் ராமநாதபுரம் தானாம். வழக்கறிஞர் கனவில் சென்னைக்கு வந்திருக்கிறார். ஆனால் எதிர்பாராமல் இன்று சீரியல்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பி.எல் படிக்க மதுரைக்கு செல்ல இருந்தவர் அக்காவால் சென்னைக்கு வர சின்னத்திரையும் அவரை ஏற்றுக்கொண்டது. சீரியலை தவிர, மலையாளத்தில் மோகன்லால் அண்ணன் மகன் நாயகனாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார் திவ்யா. அதே போல தெலுங்கில் ஒரு படத்திலும் நாயகியாக நடிக்கிறார். மலையாளம், தெலுங்குப் படங்களில் வாய்ப்பு பெற்று நடிக்கும் திவ்யாவுக்கு, அதிக தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே கனவு.

  also read.. காதல் கணவரின் பலத்தால் சீரியலில் கலக்கும் பாவம் கணேசன் குணவதி!

  ஜெனிக்கு நீண்ட நாள் ஆசை, ஆர்ஜேவாக ஆக வேண்டும் என்பது தான். ஆனால் பல காரணங்களால் இன்று வரை அந்த ஆசை நிறைவேறவில்லை. அதுமட்டுமில்லை, கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் ஆர் கே சுரேஷ் மற்றும் திவ்யா இருவரும் பிரஸ் மீட் ஒன்றை வைத்து விரைவில் தாங்கள் திருமணம் ஒன்றை கூறி இருந்தார்கள். இவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடனும் இவர்கள் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

     ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவர்களது திருமணம் ந்டைபெறாமல் போனது . அதனால் சில மாதங்கள் மன உளைச்சலில் இருந்தவர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி சீரியலில் கவனம் செலுத்த தொடங்கினார். ஆனாலும் கல்யாணம் தடைப்பட்ட சர்ச்சை இன்று வரை திவ்யாவை விடாமல் துரத்துகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja Sreeja
  First published: