Home /News /entertainment /

கோபிக்கு காத்திருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சி... பாக்கியாவுக்கு உண்மை தெரிந்து விட்டதா?

கோபிக்கு காத்திருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சி... பாக்கியாவுக்கு உண்மை தெரிந்து விட்டதா?

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி கோபியும் பாக்கியாவிடம் வசமாக மாட்டப்போவதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன.

    பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லை சீரியல் ரசிகர்களுக்கும் ஒரு ட்விஸ்ட் வெயிட்டிங்.

    பாக்கியலட்சுமி சீரியலின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் என்றால் அது கோபி கதாபாத்திரம் தான். மனைவியை ஏமாற்றி விட்டு காதலியுடன் ஊர் சுற்றும் குடும்ப தலைவன். இந்த சீரியலை பார்த்த அனைவரும் கோபியை திட்டாத நாளில்லை. உச்சக்கட்டமாக தற்போது பாக்கியா ஜெயிலில் இருக்கிறார். ஆனால் அவரை ஜாமீனில் கூட எடுக்க முயற்சி செய்யாத கோபி, ராதிகாவை கஷ்டப்பட்டு ஜாமீனில் எடுத்து அவருடனே இரவு வீட்டிலும் தங்குகிறார். இனியாவும் ஈஸ்வரி அம்மாவும் ஃபோன் செய்து கூப்பிட்டும் கூட கோபி வீட்டுக்கு வரவில்லை. அவரை ராதிகாவும் விடவில்லை.

    STATE BANK: உயர்த்தப்பட்ட வட்டி.. எஸ்பிஐயில் லோன் எடுத்தவர்கள் ஜாக்கிரதை!

    இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடில் செழியனும் எழிலும் கஷ்டப்பட்டு பாக்கியாவை ஜெயிலில் இருந்து எடுக்கின்றனர். அதுவும் பாக்கியா மீது எந்த தப்பும் இல்லை, அவர் செய்த சமையலில் பிரச்சனை இல்லை என கூறி பாக்கியா நிரபராதி என தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதற்கு மிக முக்கியமான காரணம் கோபி தான். இப்படி இருக்கையில், ஜெயிலில் இருந்து வெளியே வரும் பாக்கியா 2 மகன்களை கட்டிப்பிடித்து அழுகிறார். ஆனால் கோபி ராதிகா வீட்டில் இருக்கிறார்.

    பேப்பரில் இந்த செய்தியும் வெளியாகிறது. ராதிகா பேப்பரை பார்த்து ஷாக் ஆகுகிறார். பாக்கியா வீட்டில் ஜெனியா, இனியா, ஈஸ்வரி அம்மா என ஒட்டு மொத்த குடும்பமும் பேப்பரை பார்க்கின்றனர். அதில் பாக்கியா ஃபோட்டோ இருக்கிறது. இந்த விஷயத்தில் கோபி மீது ஒட்டுமொத்த குடும்பமும் செம்ம கோபத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் நாளைய எபிசோடில் கோபியின் அப்பா, ராமமூர்த்தி கோபி வீட்டுக்கு வந்த பிறகு அவரை  அடித்து விடுகிறார்.

    கிரெடிட் கார்டு பில் அதிகமாக வருகிறதா? இனி இந்த தப்பை செய்யாதீர்கள்!

    கால், கை முடியால் இருக்கும் அவர், கோபத்தில் கோபியை அடிக்க, மொத்த குடும்பமும் ஷாக்கில் நிற்கின்றனர். அதுமட்டுமில்லை இந்த சம்பவம் மூலம் தான் கோபியும் பாக்கியாவிடம் வசமாக மாட்டப்போவதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன. ராதிகா - கோபியின் கண்ணாமூச்சி ஆட்டம் கூடிய விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. அதற்கு தான் ஒட்டு மொத்த பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களும் வெயிட்டிங்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி