முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாக்கியாவுக்கு இப்படியொரு நிலைமையா? வக்கீலை பார்க்க போன கோபி!

பாக்கியாவுக்கு இப்படியொரு நிலைமையா? வக்கீலை பார்க்க போன கோபி!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவை ஜாமீனில் எடுக்க வக்கீலை சென்று பார்க்கிறார் கோபி.

  • Last Updated :

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவும் ராதிகாவும் ஜெயிலில் இருக்கின்றனர். இதில் யாரை கோபி காப்பாற்ற போகிறார்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. பரபரப்பான இன்றைய எபிசோடில் கோபி வக்கீலை பார்க்க செல்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா - கோபி - ராதிகா என மூவரும் இப்போது பிரச்சனையில் மாட்டியுள்ளனர். ஒருபக்கம் மனைவி பாக்கியா, இன்னொரு பக்கம் காதலி ராதிகா என இருவரும் ஜெயிலில் இருக்கின்றனர். இதில் யாரை மீட்டு வெளியில் கொண்டு வர, கோபி முடிவு செய்வார் என தெரியவில்லை. ஆனால் போலீசிடம் பாக்கியாவை போட்டுக் கொடுத்ததே கோபி தான். பாக்கியா சமைத்துக் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு ஆசிரமத்தில் இருக்கும் பிள்ளைகள் மயங்கி விழுந்து விட்டனர். போலீஸ் ராதிகாவை தான் முதலில் தேடி வந்தனர். ஆனால் கோபி ,சமைத்துக் கொடுத்தவர் பாக்கியா தான் போட்டுக் கொடுக்கிறார்.

பாக்கியாவை போலீஸில் மாட்டிவிட்ட கோபி.. கதறி அழும் குடும்பத்தினர்!

நேராக பாக்கியா வீட்டுக்கு போன போலீஸ், அவரை கைது செய்தனர். இப்போது ராதிகாவும் பாக்கியாவும் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டுள்ளனர். பாக்கியா ஸ்டேஷன் வருவதற்குள் கோபி சாமர்த்தியமாக அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். பாக்கியாவை போலீஸ் அரெஸ்ட் செய்த போது எழில் வீட்டில் இல்லை. இந்நிலையில், இன்றைய எபிசோடில் தகவல் தெரிந்து துடித்து போய் போலீஸ் ஸ்டேஷன் ஓடி வருகிறார் எழில்.

இனியா வீட்டில் அம்மாவை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தகவல் தெரிந்து பாக்கியா வீட்டுக்கு வந்து, தங்களுக்கு இதில் எந்த சம்மந்தமும் இல்லை என செல்வி அக்காவிடம் சண்டைக்கு போகின்றனர். இங்கு போலீஸ் ஸ்டேஷனில் அதிகாரிகள் முறைப்படி விசாரிக்க, பாக்கியா கதறி அழுகிறார். ஆறுதலுக்கு ராதிகாவிடம் போய் பேசுகிறார். ஆனால் பாக்கியா மீது செம்ம கோபத்தில் இருக்கும் ராதிகா அவரிடம் பேச மறுக்கிறார். மேலும் இதோடு நட்பு முடிந்து விட்டதாக கூறிவிடுகிறார். அதற்குள் அம்மாவை தேடி  வரும் எழில், போலீஸிடமும் பேசி பார்க்கிறார்.

வெறித்தனமான விஜய் ஃபேன்ஸ் போல... பீஸ்ட் படத்திற்காக பிரபல சின்னத்திரை ஜோடி செய்த காரியம்!

ஆனால் மெடிக்கல் ரிப்போர்ட் வரும் வரை இவர்கள் ஸ்டேஷனில் தான் இருக்க வேண்டும் என காவல் அதிகாரி சொல்லிவிடுகிறார். எதாவது க்ளூ கிடைக்காதா என்ற நோக்கில், எழில் ஆசிரமத்திற்கு சென்று அங்கு நடந்ததை விசாரிக்கிறார். இந்த பக்கம் கோபி ராதிகாவை ஜாமீனில் எடுக்க வக்கீலை சென்று பார்க்கிறார். செழியன், பாக்கியாவுக்கு துணையாக போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நிற்கிறார். பாக்கியாவின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என ஒட்டுமொத்த குடும்பமும் கவலையில் உள்ளனர்.

அடுத்து என்ன நடக்கும்? சாப்பாடு விஷயத்தில் எங்கு தவறு நடந்தது? போன்ற அனைத்து கேள்விகளுக்கு அடுத்த வார எபிசோடில் பதில் கிடைத்துவிடும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TV Serial, Vijay tv