• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வீட்டில் காலுடைந்த நிலையில் பாக்யா.. ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் கோபிக்கு இருக்கு வேட்டு!

வீட்டில் காலுடைந்த நிலையில் பாக்யா.. ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் கோபிக்கு இருக்கு வேட்டு!

பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்

பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்

ஒவ்வொரு முறையும் சோர்வடையும் பாக்கியாவை தேற்றுவது எழில் தான்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பைக்கில் தவறி விழுந்து காலில் அடிப்பட்டு படுத்துக்கொண்டிருக்கும் பாக்கியவை கவனிக்காமல் ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் கோபியை ரசிகர்கள் திட்டி தீர்க்கின்றனர்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் தினம் தினம் இல்லத்தரசிகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதையாக ஓடிக்கொண்டிருக்கிறது. நம் வீடுகளில் வாழும் அம்மாக்களின் நிலையை அடிக்கடி நினைவுப்படுத்துகிறார் பாக்கியா. அதனால் தான் என்னவோ பாக்கியலட்சுமி சீரியலை பெண்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர். ஒருநாள் அம்மா லீவு போட்டால் என்ன நடக்கும் என்று நாம் நினைத்திருக்க கூட மாட்டோம். ஒருவேளை அப்படி நடந்தால் நம் வீடுகளில் நிலைமை இதுதான் என ஆணி அடிப்பது போல் இயக்குனர், பாக்கியா ரோல் மூலம் நமக்கு எடுத்துரைக்கிறார். பெரும்பாலான இல்லத்தரசிகள் பாக்கியாவை தமது வீட்டு பெண் போல் கொண்டாடுகின்றனர்.

    பைக்கில் இருந்து தவறி விழுந்த பாக்கியா காலில் கட்டுடன் வீட்டுக்கு செல்கிறார். இதுவே வீட்டில் வேற யாருக்காவது இப்படி நடந்திருந்தால் வீடே தலைகீழாக மாறி இருக்கும். ஆனால் பாக்கியாவுக்கு நடந்ததால் அது ஒரு பெரிய விஷயமாகவே வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியவில்லை. ஜெனியை தவிர, இருப்பினும் தனது குடும்பத்துக்காக எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்கிறார் பாக்கியா. ஜெனி சொல்வதை கூட கேட்காமல் தொடர்ந்து வேலை செய்துக் கொண்டிருந்த பாக்கியாவை செல்ல மகன் எழில் வந்து கட்டுப்படுத்தி அம்மாவுக்கு ரெஸ்ட் கொடுக்கிறான். இன்றைய எபிசோட்டில் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்யும் எழில் அம்மாவுக்காக சாப்பாடும் சமைக்கிறான். பாக்கியா ரூமில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்க அம்மாவுக்கு தட்டில் சாப்பாடு கொண்டு போய் கொடுத்து ஓட்டியும் விடுகிறான். ஒவ்வொரு முறையும் சோர்வடையும் பாக்கியாவை தேற்றுவது எழில் தான். பின்பு எழிலுக்கு அவசரமாக ஃபோன் வரவே அங்கிருந்து உடனே கிளம்பி செல்கிறான்.

    திருநெல்வேலி டூ சென்னை பயணம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்காக ஐஸ்வர்யா எடுத்த ரிஸ்க்!

    பாக்கியாவுக்கு காலில் அடிப்பட்டது குறித்து கண்டுக்கொள்ளாத கோபி வழக்கம் போல் ராதிகாவிடம் தனது மனைவி பற்றி குறை கூறுகிறான். “ராதிகா சாப்பிட்டியா, ஆர்டர் பண்ணவா? ஆஃபிசில் டிராப் பண்ணவா”ன்னு ராதிகாவிடம் கோபி கையை பிடித்துக்கொண்டு வழிய, இதையெல்லாம் அப்படியே ஃபோனில் படம் பிடிக்கிறான் ராதிகாவின் முன்னாள் கணவர் ராஜேஷ். ஆனால் அது கோபிக்கும் ராதிகாவுக்கும் தெரியாது.

    இதற்கிடையில் ஜெனி, எழில் துவைத்த துணியெல்லாம் எடுத்து வந்து மடிக்கிறாள். அப்போது செழியன் மற்றும் கோபி ஷேர்டில் கரை ஒட்டி இருக்க, வழக்கம் போல் மாமியார் குதிக்கிறார். அவர் கத்துன்ன கத்துல பாக்கியா அலறி அடித்துக்கொண்டு மேலே இருந்து கீழே வருகிறாள். அவளிடம் சட்டையைக் காட்டில் மாமியார் கத்த, உடனே பாக்கியா நொண்டி நொண்டி சென்று கரைப்பட்ட சட்டைடை துவைத்து சரி செய்கிறாள். பாக்கியாவின் நிலையைப் பார்த்து ஜெனிக்கு பரிதாபப்படுவதை தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    சந்தோஷமாக இருக்கும் கோபிக்கு வேட்டு வைக்க பிளானுடன் வருகிறான் ராதிகாவின் முன்னாள் கணவர் ராஜேஷ். அவனைப் பார்த்து வழக்கம் போல் திருட்டு முழி முழிக்கிறான் கோபி. இருக்கு நாளைக்கு பெரிய சம்பவமே இருக்கு!


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: