பாக்கியலட்சுமி சீரியலில் ஜெயிலில் இருந்து வெளியே வரும் பாக்கியாவுக்கு கோபி தடை போடுகிறார். அதாவது இனிமேல் பாக்கியா சமையல் பிசினஸ் செய்யக்கூடாது என்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் பல தடைகளை தாண்டி எழிலும் செழியனும் பாக்கியாவை வெளியே கொண்டு வருகிறார்கள். ராதிகா கேட்டதால் தான் பாக்கியா சமையல் செய்து கொடுத்தார். ஆனால் அதை சாப்பிட்டு எல்லா குழந்தைகளும் மயங்கி விழுந்தனர். இதனால் போலீஸ் ராதிகாவை தேடி வந்தனர். ஆனால் கோபி, பாக்கியாவின் பெயரை சொல்லிவிடுகிறார். இதனால் பாக்கியா - ராதிகா இருவரையும் போலீஸ் கைது செய்து அழைத்து செல்கின்றனர். காதலி ராதிகாவை கஷ்டப்பட்டு கோபி ஜாமீனில் எடுக்கிறார். ஆனால் பாக்கியாவின் நிலை பரிதாபம்.
UIDAI : வெறும் 12 இலக்க நம்பர் மட்டும் தான் இருக்கும்! ஆதார் கார்டின் சூப்பரான அப்டேட்!
எழில், அங்கும் இங்கும் அலைந்து பாக்கியா செய்த சாப்பாட்டை ஃபுட் டெஸ்டிங்குக்கு கொடுத்து, கடைசியில் பாக்க்யா மீது எந்த தப்பும் இல்லை என நிரூப்பிக்கிறார். கோர்டும் பாக்கியாவை விடுதலை செய்கிறது. ஆனால் பேப்பரில் பாக்கியாவின் புகைப்படத்துடன் செய்தி வந்து விடுகிறது. அதே போல் ராதிகா பேரும் பேப்பரில் இருக்கிறது. இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வரும் கோபியை கோபத்தில் அடித்து விடுகிறார் அவரின் அப்பா ராமமூர்த்தி.
STATE BANK: உயர்த்தப்பட்ட வட்டி.. எஸ்பிஐயில் லோன் எடுத்தவர்கள் ஜாக்கிரதை!
அந்த நேரம் பார்த்து பாக்கியா வீட்டுக்கு வர, மொத்த குடும்பமும் பாக்கியாவை கட்டி பிடித்துக் கொள்கின்றனர். செல்வி அக்கா பாக்கியாவை பார்த்து கட்டிப்பிடித்து அழுகிறர். இந்த காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கிறது. பின்பு ஈஸ்வரி அம்மா, பாக்கியாவுக்கு ஆரத்தி எடுக்கிறார். அதன் பின்பு நடந்த எல்லா கதையும் சொல்கிறார். ஆனால் பாக்கியா மனதில்
கோபி பற்றி வருத்தம் இருக்கிறது. இவ்வளவு பிரச்சனையிலும் கோபி ஒரு வார்த்தை கூட பேசவில்லை, தனக்காக கோபி வரவில்லை என வருத்தம்.
உடனே ஈஸ்வரி அம்மா, கோபியை அழைத்து இனிமேல் சொல்லாமல் ஊருக்கு போகக்கூடாது என கண்டிக்கிறார். உடனே கோபி இனிமேல் பாக்கியா சமையல் பிசினஸ் செய்யக்கூடது என இடியை தூக்கி போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.