Home /News /entertainment /

கோபிக்கும் பாக்கியாவுக்கும் விவாகரத்து? பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கட்டம்!

கோபிக்கும் பாக்கியாவுக்கும் விவாகரத்து? பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கட்டம்!

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியல்

கூடிய விரைவில் கோபி மனைவியை விவாகரத்து செய்து விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று கூறுகிறார்.

    பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ராதிகாவை திருமணம் செய்து கொள்ள, பாக்கியாவை விவாகரத்து செய்யும் அளவுக்கு கோபி சென்று விட்டார். அதே போல் பாக்கியாவிடம் கோபி, வசமாக சிக்கி கொள்ளும் கட்டமும் நெருங்கி விட்டது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் பெண்களுக்கான ஆல் டைம் ஃபேவரெட் சீரியல் லிஸ்டில் உள்ளது. இல்லத்தரசிகளின் மத்தியில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. குடும்பதிற்காக தனது ஆசை,தேவை, சந்தோஷங்களை மறந்துவிட்டு வாழும் ஒவ்வொரு இல்லத்தரசிகளின் கதையாக தான் இந்த பாக்கியலட்சுமி சீரியல் பார்க்கப்படுகிறது.

    இதில் பாக்கியாவாக நடிக்கும் நடிகை சுசித்ராவை ரசிகர்கள் தூக்கி கொண்டாடி வருகிறார்கள். அதே போல் அவரின் கணவர் கோபியாக நடிக்கும் சதிஷை திட்டி தீர்ப்பார்கள்.

    இதையும் பாருங்க.. இரட்டை ஜடை போட்டு க்யூட்டாக இருக்கும் அமலா பால்..

    மனைவியை ஏமாற்றி காதலியுடன் ஊர் சுற்றும் கணவர், பிள்ளைகளிடம் பொய் சொல்லிவிட்டு நல்லவராக நடிப்பது போல் கோபி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.பாக்கியாவுக்கு அடுத்தப்படியான இந்த சீரியலை ரசிகர்கள் கோபிக்காகவே அதிகம் விரும்பி பார்ப்பவர்களும் உண்டு. ஒவ்வொரு முறையும் கோபி பாக்கியாவிடமும் குடும்பத்தினரிடமும் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்து விடுகிறார். கோபி தில்லாலங்கடியின் உச்சமாக இருக்கிறார். அந்த கதாப்பாத்திரம் இல்லத்தரசிகளுக்கு பிடிக்காமல் இருந்தாலும், அவருடைய தகிடுதத்தங்களையும் ரசிக்க ஒரு கூட்டம் இருக்கிறது.

    கோபி ராதிகா மீது கொண்டிருக்கும் காதலில், பாக்கியாவை விவாகரத்து செய்யும் அளவுக்கு முடிவு எடுத்து விட்டார். இன்றைய எப்பிசோடிலும் கோபி, ராதிகா வீட்டுக்கு போக, அங்கு வரும் உறவினர்களிடமும் ராதிகா அம்மா, கோபியை வருங்கால மாப்பிள்ளை என்றே அறிமுகப்படுத்துகிறார். அதுமட்டுமில்லை கூடிய விரைவில் கோபி மனைவியை விவாகரத்து செய்து விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று கூறுகிறார்.

    இதையும் படிங்க.. ஏ.ஆர் ரஹ்மான் தேடும் அந்த சகோதரிகள்.. அட நம்ம ஸ்ரீ சிஸ்டர்ஸ் தாங்க!

    அதே போல் கோபி, ராதிகாவின் மகள் மயூவுடன் டெய்லர் கடைக்கு சென்ற பில்லையும் மறந்து போய் காரில் போட்டு விடுகிறார். தற்செயலாக பாக்கியா காருக்குள் செல்ல அந்த பில்லை பார்க்கிறார். நாளைய எபிசோடை பார்த்தால் மட்டுமே அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியும்.. இதில் இருந்தும் கோபி தப்பித்து விடுவாரா? அல்லது பாக்யாவையும், வீட்டையும் ஏமாற்றும் அவருடைய கில்லாடி வேஷம் கலைந்துவிடுமா? என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி