Home /News /entertainment /

பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்.! அவரே சொன்ன தகவல்

பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்.! அவரே சொன்ன தகவல்

பாக்கியலட்சுமி  நடிகை

பாக்கியலட்சுமி நடிகை

செழியனின் மனைவியாக ஜெனி கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ்.

    சின்னதிரையில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களை கவர்ந்தவையாக இருந்து வருகின்றன. சீரியல்களின் கதைகளமும், அதில் திறம்பட நடிக்கும் நடிகர்களாலும் பல சீரியல்கள் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்து உள்ளன. அந்த வகையில் ஸ்டார் விஜய் டிவி-யில் பல ஹிட் சீரியல்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன. பிற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களை விட வித்தியாசமான கதையம்சம் கொண்ட சீரியல்கள் விஜய் டிவி-யில் அதிகம் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக விஜய் டிவி-யில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது.

    பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கேரக்டர்களான பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, அவரது கணவர் கோபியாக நடிகர் சதீஷ்குமார் நடிக்கின்றனர். கோபியின் தந்தை ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, தாய் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி நல்ல நடிப்பை வெளிப்படுத்தி சீரியலுக்கு பலம் சேர்க்கின்றனர். கோபி - பாக்கியா தம்பதியரின் மூத்த மகன் செழியன் கேரக்டரில் நடிகர் ஆர்யன், இளையமகன் எழில் கேரக்டரில் விஜே விஷால், இவர்கள் இருவருக்கும் தங்கையான இனியா கேரக்டரில் நடிகை நேஹா மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க.. valimai FDFS டிக்கெட் வாங்கிய பிரபல இயக்குநர்… அதற்கு அவரின் அப்பா ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

    இதில் செழியனின் மனைவியாக ஜெனி கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ். இவர் 1994-ஆம் ஆண்டு 12 செப்டம்பர் ராமநாதபுரத்தில் பிறந்தவர் ஆவார். ராமநாதபுரத்தில் தனது பள்ளி படிப்பை முடித்தார் மற்றும் சென்னையில் இளங்கலை சட்ட பட்டப்படிப்பை கல்லூரியில் படித்து முடித்தார். நடிகை திவ்யா கணேஷ் முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியலில் செம்பருத்தி என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர் சுமங்கலி, லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

    இதையும் படிங்க.. பாட்டியை கூட விட்டு வைக்கவில்லை! மெளன ராகம் ரவீனா வீடியோவை பார்த்தீங்களா?

    எனினும் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தான் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயம் ஆனார். வெள்ளித்திரையில் அடங்காதே, கண்ணாடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by divyaganesh (@divya_ganesh_official)






    பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருவதன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். சில விளம்பரங்களிலும் தோன்றி இருக்கிறார். சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக காணப்படும் இவரை இன்ஸ்டாவில் சுமார் நான்கரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாவில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த நடிகை திவ்யா கணேஷ் தனது திருணம் பற்றிய தகவல் ஒன்றை தெரிவித்து இருக்கிறார். ஒரு ரசிகர் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி கேட்க அதற்கு விரைவில் (soon) என்று மட்டும் பதில் தெரிவித்து உள்ளார். எப்போது, யாருடன் திருமணம் என்று தெரிவிக்காததால் அவரது ரசிகர்கள் மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி