• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரியல் மகளுடன் இன்ஸ்டா ரீலில் கலக்கும் பாக்கியலட்சுமி சீரியல் சுசித்ரா!

ரியல் மகளுடன் இன்ஸ்டா ரீலில் கலக்கும் பாக்கியலட்சுமி சீரியல் சுசித்ரா!

பாக்கியலட்சுமி சீரியல் சுசித்ரா

பாக்கியலட்சுமி சீரியல் சுசித்ரா

தனது திறமையான நடிப்பின் மூலம் தெலுங்கிலும் வாய்ப்பு பெற்ற இவர் ஜெமினி டிவி சீரியல்களில் நடித்தார்.

  • Share this:
தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறது. எனவே பல முன்னணி தமிழ் சேனல்கள் போட்டி போட்டு கொண்டு வித்தியாசமான கதைகளை கொண்ட சீரியல்களை ஒளிபரப்பி தங்களது டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தி கொள்கின்றன. ஸ்டார் விஜய் டிவி-யில் நிறைய சீரியல்கள் ஓடினாலும், இரவு நேரங்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்களை மிகவும் விரும்பி பார்க்கிறார்கள்.

இதில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு சீரியல் ஆகும். சரியாக படிக்காத குடும்பத்தலைவி ஒருவர் தன் குடும்ப உறுப்பினர்களுக்காக செய்யும் தியாகங்கள், படும் கஷ்டங்கள் மற்றும் அவமானங்கள் உள்ளிட்டவை இந்த சீரியலில் மையக்கருவாக இருக்கிறது. கணவன், தோளுக்கு மேல் வளர்ந்த 3 பிள்ளைகள், ஒரு மருமகள் மற்றும் மாமனார் & மாமியார் உள்ளிட்டோரை தனி ஒரு ஆளாக கவனித்து கொண்டு சுயதொழில் செய்யும் முயற்சியில் போராடி வரும் தாயாக தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்து அவர்களை நெகிழ செய்து வருகிறார் பிரபல நடிகையான சுசித்ரா ஷெட்டி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வீட்டில் இருக்கும் பெண்களாலும் சாதிக்க முடியும் என்ற விஷயத்தை திறமையான அதே சமயம் யதாரத்தமான நடிப்பால் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் வெளிப்படுத்தி ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் சுசித்ரா ஷெட்டி, அண்டை மாநிலமான கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவை சேர்ந்தவர்.

தனது 14 வயதிலேயே நடிகர் உபேந்திராவின் தங்கையாக கன்னட திரைப்படத்தில் அறிமுகமாகி விட்டார். தொடர்ந்து கன்னட சினிமாவில் 15-க்கும் மேற்பட்ட படத்தில் நடித்துள்ளார்.திருமணத்திற்கு பின் மாங்கல்யா என்ற கன்னட சீரியல் மூலம் சின்னதிரையில் அறிமுகமாகி தொடர்ந்து காவியஞ்சலி, ஈஸ்வரி, ராதா ரமணன் உள்ளிட்டவற்றில் நடித்தார்.

Also read... மகனின் முதலாம் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்!

தனது திறமையான நடிப்பின் மூலம் தெலுங்கிலும் வாய்ப்பு பெற்ற இவர் ஜெமினி டிவி சீரியல்களில் நடித்தார். இதனை தொடர்ந்து கலைஞர் டிவியில் நாணல் என்ற சீரியலில் நடித்தார். ad shoot ஒன்றில் இவரது நடிப்பு திறமையை பார்த்த டைரக்டர் ஏ.எல்.விஜய், தனது சைவம் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுத்தார். பின்னர் தற்போது பாக்கியாவாக நடித்து ஒவ்வொரு வீட்டிலும் அம்மாக்கள் படும் சிரமங்களை பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்களுக்கு உணர்த்தி இருக்கிறார்.



 




View this post on Instagram





 

A post shared by Suchitra Ks (@suchitraks)








 




View this post on Instagram





 

A post shared by Suchitra Ks (@suchitraks)








 




View this post on Instagram





 

A post shared by Suchitra Ks (@suchitraks)






சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், தனது நிஜ மகளுடன் சேர்ந்து இன்ஸ்டாவில் போட்டோ மற்றும் இன்ஸ்டா ரீல்ஸ்களை ஷேர் செய்து உள்ளார். அவற்றை பார்த்த ரசிகர்கள் க்யூட் அம்மா & மகள் என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: