Vijay TV: ’பாரம்பரிய நடனம் மீதான என் காதல்...’ கரகாட்டத்தில் கலக்கிய பாக்கியலட்சுமி ஜெனிஃபர்!

Vijay TV: ’பாரம்பரிய நடனம் மீதான என் காதல்...’ கரகாட்டத்தில் கலக்கிய பாக்கியலட்சுமி ஜெனிஃபர்!

திவ்யா கணேஷ்

சீரியல் நடிகை திவ்யா கணேஷ் தான் கரகாட்டம் ஆடியிருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

  • Share this:
    சீரியல் நடிகை திவ்யா கணேஷ் தான் கரகாட்டம் ஆடியிருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஜெனிஃபர் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ். இவர் ஒரு திறமையான நடிகை மட்டுமல்ல, சிறந்த நடனக் கலைஞரும் கூட. தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடன கலைகளில் ஒன்றான கரகட்டத்தில் அவர் காட்டியிருக்கும் ஆர்வம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது. அவர் தனது நண்பர்கள் அரவிந்த் மற்றும் நடிகை அபிநயா சதீஷ்குமார் ஆகியோரின் உதவியுடன் கரகாட்ட பயிற்சி பெற்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் கைப்பிடியில் வெளியிட்டிருக்கிறார்.

    Priyamani: நிர்வாண படம் கேட்ட ரசிகருக்கு பிரியாமணியின் தெறி பதில்…



     




    View this post on Instagram





     

    A post shared by divyaganesh (@divya_ganesh_official)





    “நான் எப்போதுமே கரகட்டம் கற்றுக் கொள்ள விரும்பியிருக்கிறேன்! இந்த பாரம்பரிய நடனத்தின் மீதான என் காதல் வெகு காலமாக இருக்கிறது!!” என்று குறிப்பிட்டுள்ள திவ்யா, ‘ஒத்த ரூபா தாரேன்’ பாடலுக்கு கரகாட்டம் ஆடியிருக்கிறார்.

    இதைப் பார்த்த ரசிகர்கள், பாரம்பரிய கலைகள் மீதான திவ்யாவின் ஆர்வத்திற்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். தவிர கேளடி கண்மணி (செம்பருத்தி), சுமங்கலி (அனு சந்தோஷ்), மற்றும் லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்துப் புகழ் பெற்றிருக்கும் திவ்யா, கிராமத்தில் ஓரு நாள் என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: