Home /News /entertainment /

வடபழனி முருகன் கோவிலில் தரிசனம் கிடைக்காமல் வெளியேறிய நடிகை திவ்யா கணேஷ்!

வடபழனி முருகன் கோவிலில் தரிசனம் கிடைக்காமல் வெளியேறிய நடிகை திவ்யா கணேஷ்!

divya ganesh

divya ganesh

Divya Ganesh | பாக்கியலட்சுமி சீரியலில் திவ்யா கணேஷ் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்ணாக ஜெனி என்ற பாத்திரத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததுதான். இவர் பாக்கியலட்சுமியின் மூத்த மருமகளாக நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் சீரியல்களில் மிகவும் முக்கியமானது பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு அனைத்து தரப்பினரிடமிருந்தும், குறிப்பாக பெண்கள் மற்றும் குடும்பத் தலைவிகளிடமிருந்தும் மிகப் பெரிய அளவில் வரவேற்பு உள்ளது.

சீரியலில் ஜெனி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை திவ்யா கணேஷ் நடித்து வருகிறார். சமீபத்தில், வடபழனி முருகன் கோவிலுக்குச் சென்று தரிசனம் கிடைக்காமல் இவர் திரும்பி வந்தது வைரல் செய்தியாகப் பரவி வருகிறது. ஏன் கோவிலுக்கு உள்ளே செல்ல முடியாமல் திரும்பி வந்துவிட்டார்?

பாக்கியலட்சுமி சீரியலில் திவ்யா கணேஷ் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்ணாக ஜெனி என்ற பாத்திரத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததுதான். இவர் பாக்கியலட்சுமியின் மூத்த மருமகளாக நடித்து வருகிறார். ஆனால், உண்மையில் திவ்யா கணேஷ் ஒரு இந்துப்பெண். இவருக்கு பாக்கியலட்சுமி சீரியல் பெயர், புகழ் மற்றும் ரசிகர் கூட்டத்தையும் பெற்றுத்தந்துள்ளது. கிறித்துவப் பெண்ணாக ஹிந்து ஆணை திருமணம் செய்வது போன்ற கதையோட்டம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. திவ்யாவும் ஜெனியாக ரசிகர்கள் மனதைக் கவர்ந்துள்ளார்.

திவ்யாவுக்கு இந்த சீரியலின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகியுள்ளனர். மற்ற நடிகர் நடிகைகளையும் போலவே திவ்யா கணேஷும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இவர் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றது. திவ்யா சமீபத்தில் கோவிலுக்கு சென்றது மிகவும் பரபரப்பாகியுள்ளது. அதற்குக் காரணம் அவர் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பியது தான்.

Also Read : பிக் பாஸ் பார்த்துட்டு விஜய் என்ன சொன்னார்? வெளிப்படையாக கூறிய சஞ்சீவ் வெங்கட்!

சமீபத்தில், திவ்யா கணேஷ் அதிகாலை நான்கு மணிக்கே வடபழனி முருகன் கோவிலுக்கு சென்றிருக்கிறார். ஆனால் கோவிலில் இவருக்கு முன்பாகவே கூட்டம் நிறைய இருந்ததால் இவரால் சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. அதுமட்டுமின்றி கோவிலுக்கு உள்ளேயும் கூட்டம் காரணமாகச் செல்ல முடியவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதனால் கோவிலுக்கு வெளியே இருந்தபடி தரிசனம் செய்து வெளியேறி இருக்கிறார்.

வடபழனி முருகன் தரிசனம் கிடைக்கவில்லை என்றாலும், அதற்குப் பிறகு மாங்காடு சென்று அம்மன் தரிசனம் பெற்ற பிறகு சீரியல் ஷூட்டிங் சென்றிருக்கிறார் சென்றிருக்கிறார்.




நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பதற்கு ஏற்ப இவர்களால் முருகனை தரிசனம் செய்ய முடியவில்லை. இவர்களுக்கு முன்பு ஏகப்பட்ட நபர்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்றும், ஷூட்டிங்கிற்கு நேரமாகும் காரணத்தால் அங்கிருந்து மாங்காடு சென்று அம்மன் தரிசனமாவது பெற்று விட்டு வரலாம் என்று சென்றதாகவும், இன்றைக்கு அம்மன் தரிசனம் தான் வாய்த்திருக்கிறது போல என்று கம்பம் மீனா செல்லமுத்து திவ்யாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வேடிக்கையான கேப்ஷனுடன் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பகிர்ந்துள்ளார்.
Published by:Selvi M
First published:

Tags: Actress, Murugan temple, Vijay tv

அடுத்த செய்தி