Home /News /entertainment /

பாக்கியாவுக்கு எதிராக இனியாவை மாற்றும் கோபி.. கல்யாணத்திற்காக போடும் நாடகம்!

பாக்கியாவுக்கு எதிராக இனியாவை மாற்றும் கோபி.. கல்யாணத்திற்காக போடும் நாடகம்!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியா அதிர்ச்சியில் கலங்கி போகிறார். இனியாவிடம் மட்டும் கோபி நல்லவர் வேஷம் போடுகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவை சந்தித்து பேசுகிறார் கோபி.அதுமட்டுமில்லை இனியா கல்யாணத்திற்காக ஓகே சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பாக்கியாவை பற்றி தப்பு தப்பாக பேசி இனியாவின் மனசை மாற்றுகிறார்.

    பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பது ராதிகா - கோபியின் திருமண எபிசோடுக்காக தான். கல்யாண வயதில் மகனை வைத்துக் கொண்டு 2வது கல்யாணம் செய்ய ஆசைப்படுகிறார் கோபி. அதுவும் மனைவியை வேண்டாம் என்று விவாகரத்து செய்து விட்டு காதலி ராதிகாவுடன் சேர துடிக்கிறார். இவர்களின் கல்யாணத்துக்கு சமைக்க போவது பாக்கியா தான். அடுத்த நிலைக்கு முன்னேறலாம் என நினைத்து பாக்கியா கல்யாண சமையல் ஆர்டர்களை எடுக்க முடிவு எடுக்கிறார். அவருக்கு  வரும் முதலே ஆர்டரே அவரின் முன்னாள் கணவர் கோபி - ராதிகா திருமணம் தான்.

    பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையுடன் சிம்பு.. இந்த சந்திப்பு எப்ப நடந்தது?

    ஏற்கெனவே திருமணம் பற்றி அம்மா ஈஸ்வரியிடம் கோபி சொல்கிறார். ஆனால் அவர் கோபியை கண்டப்படி திட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதனால் அடுத்து இனியாவின் மனசை மாற்றி அவரின் சம்மதத்தை வாங்க பிளான் போடுகிறார் கோபி. அதனால் இனியாவை ஸ்கூலில் இருந்து பிக்கப் செய்து ராதிகா வீட்டுக்கு அழைத்து செல்கிறார். பின்பு அங்கிருந்து காரில் வீட்டுக்கு அழைத்து வருகிறார். வரும் வழியில் பாக்கியாவை பற்றி தப்பு தப்பாக பேசுகிறார்.

    கர்ப்பமாக இருக்கும் ரோஜா சீரியல் நடிகைக்கு சிம்பிளாக நடந்த வளைகாப்பு !

    பாக்கியா ஒரு பட்டிக்காடு, படிக்க தெரியாதவர் ஆனால் ராதிகா அப்படியில்லை நீ ராதிகாவை ஃபிரண்டாக பாரு என இனியாவுக்கு கோபி அட்வைஸ் கொடுக்கிறார். அதுமட்டுமில்லை கல்யாணத்திற்காக ராதிகா இனியாவுக்கு எடுத்துக் கொடுத்த ட்ரெஸ்ஸையும் கோபி கொடுக்கிறார். இதை எல்லாம் பார்த்து இனியா பயங்கர ஹேப்பி. ஆனால் திருமணம் பற்றி கோபி பேசவில்லை. கோபியுடன் இனியா காரில் வருவதை பாக்கியா பார்த்து விடுகிறார். பின்பு ஈஸ்வரி பாட்டி இனியாவை கூப்பிட்டு விசாரிக்கிறார். அப்போது தான் ராதிகா வீட்டுக்கு போன விஷயத்தை இனியா, எல்லோரிடமும் சொல்கிறார். பாக்கியா அதிர்ச்சியில் கலங்கி போகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி