Home /News /entertainment /

பாக்கியாவின் நிலையை பார்த்து கதறி அழும் செல்வி அக்கா!

பாக்கியாவின் நிலையை பார்த்து கதறி அழும் செல்வி அக்கா!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் மிகப் பெரிய இடியை தாங்கி கொண்டு வீடு வந்து சேர்கிறார் பாக்கியா.

    பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செல்லும் பாக்கியலட்சுமி சீரியலில் மழையில் நனைந்தப்படி வீடு வந்து சேர்ந்த பாக்கியாவை பார்த்து அழுகிறார் செல்வி அக்கா. பாக்கியாவுக்கு எல்லா உண்மைகளும் தெரியும் என்பது வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாது. இப்படி இருக்கையில் பாக்கியாவின் முகத்தை வைத்து ராமமூர்த்தி தாத்தாவுக்கு சந்தேகம் வருகிறது.

    ஒட்டு மொத்த பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களும் கோபி மாட்ட வேண்டும் என நினைத்தனர். ஆனால் கோபி மாட்டிய பின்பு பாக்கியாவின் நிலை தான் ஐயோ பாவம் என்பது போல் ஆகி விட்டது. கணவரும் , தோழியும் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக பாக்கியா நினைக்கிறார். அவரால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. அவரின் ஃபோன் ஸ்விட்ச் ஆஃபில் இருப்பதால் ஜெனி, இனியா, எழில் என அனைவரும் பாக்கியாவை நினைத்து வருத்தப்படுகின்றனர். ஆனால் அதற்கு மேல் ஒரு மிகப் பெரிய இடியை தாங்கி கொண்டு வீடு வந்து சேர்கிறார் பாக்கியா.

    பிக் பாஸ் சீசன் 6 க்கு செல்லும் குக் வித் கோமாளி பிரபலம்.. இணையத்தில் உலாவும் இந்த செய்தி உண்மையா?

    பாக்கியாவின் இந்த வித்தியாசமான நடவடிக்கை செல்வி அக்காவுக்கு பயத்தை தருகிறது. பாக்கியாவை பார்த்து தன்னை அறியாமல் அழுகிறார். ஆனால் பாக்கியா ஒரு வார்த்தை கூட பதில் பேசவில்லை. இதனால் வீட்டில் இருக்கும் ராமமூர்த்தி தாத்தாவுக்கு பயம் வருகிறது. அந்த நேரம் பார்த்து அவருக்கு எழிலிடமிருந்து ஃபோன் வருகிறது. கோபியை பற்றி விசாரிக்கிறார் தாத்தா. ஆஸ்பிட்டலில் கோபியை சுற்றி மொத்த குடும்பமும் நிற்கின்றனர்.

    ஈரமான ரோஜாவே சீரியலுக்கு வந்த சோதனை.. விக்ரம் பட பாடலை போட்டது குத்தமா?

    பாக்கியா மட்டும் வரவில்லை என நினைத்து கொண்டு ஜெனியும் எழிலும் நர்ஸிடம் விசாரிக்கின்றனர். அவர்கள் கோபியின் மனைவி அவரை வந்து பார்த்ததாக சொல்கின்றனர். அவர்கள் அது பாக்கியா என நினைத்துக்கொண்டு சந்தோஷம் அடைகின்றனர். ஆனால் அவர்கள் சொன்னது ராதிகாவை.

    இவ்வளவு பிரச்சனையிலும் கோபிக்கு பெரிய நிம்மதி ராதிகா வந்து பார்த்தது மற்றும் ஈஸ்வரி அம்மா பிரச்சனையை பற்றி பேசாமல் அமைதியாக நின்றது. மொத்தத்தில் கோபியின் உண்மை தெரிய வந்த பின்பு வாழ்க்கை தலைகீழானது கோபிக்கு இல்லை பாக்கியாவுக்கு தான். இந்த காட்சிகள் அனைத்தும் இன்றைய எபிசோடில் ஒளிப்பரப்பாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி