ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெட்கமா இல்லையா சார்.. கோபி கல்யாணத்தில் பொங்கி வெடித்த செல்வி அக்கா!

வெட்கமா இல்லையா சார்.. கோபி கல்யாணத்தில் பொங்கி வெடித்த செல்வி அக்கா!

செல்வி அக்கா

செல்வி அக்கா

பாக்கியலட்சுமி இன்றைய புரமோவில் செல்வி அக்கா, கோபியை திட்டி தீர்க்கிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாக்கியலட்சுமி சீரியலில் கோபி - ராதிகா கல்யாணத்தில் கோபத்தில் பொங்கி வெடிக்கிறார் செல்வி அக்கா. இதுக் குறித்த புரமோ வெளியாகியுள்ளது.

  பாக்கியலட்சுமி சீரியலில் கோபி - ராதிகா திருமணத்தின் ஹைலைட் எபிசோடுகள் ஒளிப்பரப்பாகி வருகின்றன. இணையத்தில் வெளிவந்த புகைப்படத்தின் படி கோபி - ராதிகா கல்யாணம்  இனிதே முடிவடைந்தது. இதுக்குறித்த எபிசோடுகள் வரும் வாரத்தில் ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான புரமோ வெளியாகியுள்ளது. இதில் சமைக்க போனது ராதிகா - கோபி கல்யாணத்திற்கு தான் என்பது பாக்கியாவுக்கு தெரிய வருகிறது. முதலில் இதை செல்வி அக்கா தான் கவனிக்கிறார். உடனே அவர் ஓடி சென்று பாக்கியாவை அழைத்து வருகிறார்.

  நிஜ முகத்தை காட்டிய மீனா அப்பா.. ஷாக்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி குடும்பம்!

  அந்த நேரம் பார்த்து கோபியும் ராதிகாவும் போஸ் கொடுக்கின்றனர். பாக்கியா இதை பார்த்ததும் அதிர்ச்சியில் தடுமாறி போகிறார். அவர் இதை எதிர்பார்க்கவில்லை, இந்த பக்கம் கல்யாணத்தை நிறுத்த ஆட்டோவில் மண்டம் மண்டபமாக ஏறி இறங்குகிறார் கோபியின் அப்பா ராமமூர்த்தி. ஆனால் அவர் வந்தும் கல்யாணம் நிற்க போவதில்லை என்பது தெரிந்து விட்டது. இந்நிலையில் இன்றைய புரமோவில் செல்வி அக்கா, கோபியை திட்டி தீர்க்கிறார்.

  ' isDesktop="true" id="810929" youtubeid="yFZL65vAOo8" category="television">

  ”வெட்கமா இல்லையா சார், வீட்ல கல்யாண வயதில் பையனை வைத்து கொண்டு இப்படி ஒரு கல்யாணம் தேவையா? நீங்க மனிஷனே இல்லை. பாக்கியா அக்கா பாவம்” என கதறுகிறார் செல்வி. ராதிகா, அவரின் அம்மா, கோபி, ராதிகா அண்ணன் எல்லோரும் ஷாக்கில் பதில் பேச முடியாமல் நிற்கின்றனர்.  அடுத்து என்ன நடக்கும்? ராமமூர்த்தி தாத்தா வந்த பிறகு சண்டை இன்னும் பெரிதாகும் போல. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இன்றைய எபிசோடு ஒளிப்பரப்பாக போகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv