Home /News /entertainment /

பாக்கியாவுக்கு இப்படியொரு நிலையா! கதறி துடிக்கும் செல்வி அக்கா

பாக்கியாவுக்கு இப்படியொரு நிலையா! கதறி துடிக்கும் செல்வி அக்கா

செல்வி அக்கா

செல்வி அக்கா

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை ராதிகாவுடன் முதன் முதலில் பார்த்தது செல்வி அக்கா

    பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியாவின் நிலையை பார்த்து சொந்த தங்கை போல கதறி அழுகிறார் செல்வி அக்கா. வீட்டை விட்டு வெளியே வந்த பாக்கியாவுக்கு தற்போது எழில் மற்றும் செல்வி அக்கா ஆறுதலாக நிற்கின்றனர்.

    பரபரப்பான திருப்பங்கள் உடன் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நேற்றைய எபிசோடில் பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இனிமேல் இந்த வீட்டுக்கு வரமாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். எழில், செழியன், ஜெனி, இனியா என யார் சொல்லியும் பாக்கியா கேட்கவில்லை. அவருடன் செல்வி அக்காவும் எழிலும் துணையாக வந்து விடுகின்றனர். பாக்கியா நேராக சமையல் வேலை நடத்தும் கம்பெனிக்கு செல்கிறார். அங்கு இருப்பவர்கள் பாக்கியாவை பார்த்து கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். ஆனால் யாரிடமும் பாக்கியா ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    சூப்பர் சிங்கர் பிரபலத்தை தேடி போகும் பிக் பாஸ் வாய்ப்பு? இணையத்தில் பரவும் தகவல்!

    இந்நிலையில் பாக்கியாவின் நிலையை பார்த்து சொந்த தங்கை போல் செல்வி அக்கா கண்ணீர் விடுகிறார். அதே போல் பாக்கியா வீட்டை விட்டு வந்தது தப்பு என சண்டை போடுகிறார். கோபியை பயங்கரமாக திட்டி அவரை தான் வீட்டை விட்டு அனுப்பி இருக்க வேண்டும் என சொல்கிறார். அதே போல் பாக்கியாவுக்கு ஆறுதலாக எழிலும் பேசுகிறார். இனிமேல் அம்மா  என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நான் துணையாக இருப்பேன் என்று உறுதியாக சொல்கிறார். இப்போது பாக்கியாவுக்கு இருக்கும் ஆறுதல் செல்வி அக்கா மற்றும் எழில் தான்.

    7 பக்கத்திற்கு கடிதம்.. மகளால் உடைந்து அழுத விஜய் டிவி ஆங்கர் அர்ச்சனா!

    அதே போல் இந்த சீரியலில் கோபியை ராதிகாவுடன் முதன் முதலில் பார்த்தது செல்வி அக்கா. அன்றிலிருந்தே  அவர் பாக்கியாவிடம் கோபி  பற்றியும் அவரின் நடவடிக்கை பற்றியும்  சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் கோபி மீது இருந்த நம்பிக்கையில் பாக்கியா அதை நம்ப மறுத்தார். .இந்நிலையில் செல்வி அக்கா சொன்னது போலவே கடைசியில் நடந்து விட்டது. அதே போல் ராதிகாவையும் அவர் திட்டி தீர்க்கிறார்.

    பாக்கியாவுக்கு எல்லா விஷயமும் தெரிந்து விட்டது, கோபி - பாக்கியா குடும்பம் பிரிந்தது என எந்த கதையும் ராதிகாவுக்கு தெரியாது. அங்கே அவர் மயூவுடன் மும்பைக்கு செல்ல தயாராகி கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி