Home /News /entertainment /

யாமினி யாமினி..அழகான சிரிப்புக்கு சொந்தக்காரியான ஜெனிஃபர் சின்னத்திரைக்கு வந்த கதை!

யாமினி யாமினி..அழகான சிரிப்புக்கு சொந்தக்காரியான ஜெனிஃபர் சின்னத்திரைக்கு வந்த கதை!

சீரியல் நடிகை ஜெனிஃபர்

சீரியல் நடிகை ஜெனிஃபர்

பார்த்திப கனவு படத்தில் தினேஷ் மாஸ்டருடன் இவர் நடித்து ஆடிய குத்து பாடல் பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்.

  baakiyalakshmi radhika vijay tv : ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலான பாக்கியலட்சுமி தொடரில் இருந்து சமீபத்தில் விலகிய ராதிகா கெரியர் லைஃப் ஒரு ரீவைண்ட்

  இளம் வயதிலேயே மீடியாவில் நுழைந்த ஜெனிஃபர் அழகான சிரிப்புக்கு சொந்தக்காரி ஆவார். நடிகை, டான்ஸர்.. எனப் பன்முகம் கொண்ட இவர் தமிழ்த் திரைப்பட உலகில் `நந்திதா’வாக அறியப்பட்டவர். அவரின் அப்பாவும் கோரியோகிராஃபர் என்பதால் அவர் கூட ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதன் பின்பு அப்பாவுக்கு நந்தித்தாவே அசிஸ்டென்ட் கோரியோகிராஃபரா மாறினார்.

  also read ..சரியான நேரத்தில் சின்னத்திரைக்கு குட் பாய்... மேக்கப் ஆர்டிஸ்டாக உயர்ந்து நிற்கும் சந்தோஷி!

  டான்ஸ் அவரின் பேஷனாக ஆரம்பிச்சது. `காதல் ஜாதி’ படம் மூலமா அவரின் திரைப் பயணம் ஆரம்பிச்சது.2000 ஆம் ஆண்டில் நடிகர் அர்ஜூன் நடித்த ரிதம் திரைப்படத்தில் ஒருசில காட்சியில் முகம் காட்டினார். பின்னர் 2002 ல் ஷாம்-சிநேகா நடிப்பில் வெளியான ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படத்தில் யாமினி கேரக்டரில் நடித்து ஒரு பாடல் காட்சியில் நடனமாடினார். 90கிட்ஸ்கள் அந்த பாடலை அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார்கள். ரெட் கலர் ட்ரெஸில் பாடல் முழுவதும் சிரித்தப்படியே நடனம் ஆடுவார். பார்த்திப கனவு படத்தில் தினேஷ் மாஸ்டருடன் இவர் நடித்து ஆடிய குத்து பாடல் பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்.

  கணவருடன் ஜெனிஃபர்


  அதன்பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய முத்தம் படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்தபடம் படம் அவருக்கு எதிர்மறையான விமர்சனங்களை பெற்று தந்தது. இருப்பினும் தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்தார். பத்தொன்பதாவது வயசில் இவருக்கு திருமணம் நடந்துச்சு. திருமணத்திற்கு பிறகு சின்னத்திரையில் கவனம் செலுத்த தொடங்கினார்.

  சன்டிவியின் புவனேஸ்வரி, நாகவல்லி, லட்சுமி ஸ்டார்ஸ் என பல சீரியல்களில் இவரின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அதுமட்டுமில்லை ஜீ தமிழில் கில்லாடீஸ் 2வது சீசனில் காதல் கணவருடன் இணைந்து கலந்து கொண்டார்.அதன் பின்பு தான் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்து மீண்டும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றார். இந்நிலையில் சமீபத்தில் தான் இந்த சீரியலில் இருந்து விலகினார். அதற்கு காரணம் தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார். நீளமான கூந்தல் ஜெனிஃபரின் சீக்ரெட் அழகு ரகசியம்.
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Vijay tv

  அடுத்த செய்தி