Home /News /entertainment /

பாக்கியலட்சுமியில் வில்லியாகும் ராதிகா.. இது என்ன புது ட்விஸ்டால இருக்கு!

பாக்கியலட்சுமியில் வில்லியாகும் ராதிகா.. இது என்ன புது ட்விஸ்டால இருக்கு!

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா தனது கோபத்தை ஈஸ்வரி அம்மாவிடம் காட்டுகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ரோல் நெகடிவ் ரோலாக மாற்றப்படும் என தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. சமீபத்தில் வெளியான புரமோவும் அதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது.

    விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த 2 வாரங்களாக கோபியின் சுயரூபத்தை தெரிந்துகொண்ட பாக்யா எடுத்த அதிரடி முடிவுகளும் அதன்பிறகு கோபி குடும்பத்தினர் நடந்துகொண்ட விதமும் பரபரப்பின் உச்சமாக இருந்தது. கோபிக்கு பாக்கியா டைவர்ஸ் தந்து விட்டார். அதுமட்டுமில்லை 60 லட்சம் பணத்தையும் ஒரு வருஷத்தில் தருவதாக சவால் விட்டு இருக்கிறார். கோபி தற்போது வீட்டை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், கோபியை திருமணம் செய்வது தொடர்பான ராதிகா என்ன முடிவெடுப்பார் என்பது குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    லவ்வோ லவ்வு.. சினேகன் - கன்னிகாவின் சிம்பிளான திருமண நாள் கொண்டாட்டம்!

    ஏற்கெனவே கோபி ராதிகாவை நேரில் பார்த்து பாக்கியா தான் குற்றவாளி என்பது போல் பேசிவிட்டு வந்தார். அதேபோல் கோபி பாக்யாவின் கணவர் என்று தெரிந்ததும் ராதிகா திருமணம் வேண்டாம் என்றார். ஆனால் இப்போது கோபியின் நிலைமை, பாக்கியாவின் டைவர்ஸ், ஈஸ்வரி அம்மா, ஜெனியின் பேச்சு அவரை யோசிக்க வைக்கிறது. இத்தனை நாளாக ராதிகாவின் ரோல் நல்ல முறையில் காட்டப்பட்டு வந்தது. கோபி தான் ராதிகாவை ஏமாற்றி வந்தார். ஆனால் வரும் நாட்களில் ராதிகா ரோல் நெகடிவாக காட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.



    இதற்கு முன்பு ராதிகா ரோலில் நடித்து வந்த ஜெனிஃபரும் இதைத்தான் கூறி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான புரமோவிலும் கூட ராதிகா தனது கோபத்தை ஈஸ்வரி அம்மாவிடம் காட்டுகிறார். இத்தனை நாளாக அமைதியாக பொறுமையாக போன ராதிகா இனிமேல் அப்படி இருக்க மாட்டார் என தெரிகிறது. கதை அடுத்து எப்படி நகரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி