• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நிறைமாத கர்ப்பிணி... பாக்கியலட்சுமி ராதிகாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

நிறைமாத கர்ப்பிணி... பாக்கியலட்சுமி ராதிகாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

பாக்கியலட்சுமி ராதிகா

பாக்கியலட்சுமி ராதிகா

ராதிகா கேரக்டர் நெகட்டிவாக மாற்றப்பட உள்ளதாகவும், தனக்கு நெகட்டிவ் ரோலில் நடிக்க விருப் பம் இல்லை

  • Share this:
    கர்ப்பமாக இருக்கும் தனது வயிற்றை கண்ணாடியில் பார்த்து சிரிப்பது போன்ற ஃபோட்டோ ஒன்றை தற்போது இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார் பாக்கியலட்சுமி ராதிகா. 

    ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்ததன் மூலம் தற்போது சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார் நடிகை நந்திதா ஜெனிஃபர். பல இல்லத்தரசிகளின் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கேரக்டரில் அமைதியான் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நந்திதா ஜெனிஃபர். சில மாதங்களுக்கு முன்னர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென்று விலகி விட்டார் நடிகை நந்திதா.

    இவர் சீரியலை விட்டு விலகும் முன்பே இது குறித்த தகவல் சோஷியல் மீடியாக்களில் பரவினாலும், அது பொய்யான தகவல் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், உண்மையிலேயே நடிகை நந்திதா ஜெனிஃபர், ராதிகா கேரக்டரில் இருந்து விலகியது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியலான பாக்கியலட்சுமியில், இயல்பான நடிப்பு மற்றும் ரியாக்ஷன்கள் மூலம் எபிசோட்களை சுவாரஸ்யமாக்கி வந்தார் நந்திதா ஜெனிஃபர்.

    இது தவிர சீரியலில் இவர் மெயின்டெய்ன் செய்து வந்த ஸ்டைல் மற்றும் டிரெஸிங்குகளுக்கு பெண் ரசிகர்கள் அதிகம். சீரியலில் ஹீரோயின் கேரக்டரான பாக்கியாவை எந்த அளவுக்கு ரசிகர்களுக்கு பிடிக்குமோ, அதே அளவிற்கு ராதிகா கேரக்டரில் நடித்த நந்திதாவையும் ரசிகர்களுக்கு பிடித்து போனது. இந்த நிலையில் சீரியலில் இருந்து விலகியதால் தான் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் ஏமாற்றத்தை சோஷியல் மீடியாக்கள் மூலம் அவரது ரசிகர்கள் புலம்பி தீர்த்தனர்.

    இதனால் நந்திதா பற்றிய பேச்சு நாளுக்கு நாள் அதிகரித்தது. அவருக்கும் இன்ஸ்டாவில் ஆயிரக்கணக்கான மெசேஜ்கள் குவிந்தன.தன்னை இந்த அளவிற்கு கொண்டாடுகிறார்கள் என்பதை அறியாமல் இருந்த நடிகை நந்திதா, நிரம்பி வழிந்த இன்பாக்ஸால் திக்குமுக்காடி உள்ளார். பின்னர் சீரியலில் ராதிகா கேரக்டர் நெகட்டிவாக மாற்றப்பட உள்ளதாகவும், தனக்கு நெகட்டிவ் ரோலில் நடிக்க விருப் பம் இல்லை என்பதாலும், தனிப்பட்ட சில காரணங்களுக்காகவுமே சீரியலில் இருந்து விலக நேர்ந்ததாக ரசிகர்களுக்கு விளக்கம் அளித்தார்.




    கூடவே தான் கர்ப்பமாக இருக்கும் நற்செய்தியையும் அறிவித்தார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். சமீபத்தில் தான் நடிகை நந்திதா ஜெனிஃபருக்கு வளைகாப்பு நடைபெற்றது. விழா முடிந்த பின் இவர் வெள்ளித்திரையில் டான்ஸ் ஆடிய பார்த்திபன் கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனிடையே கர்ப்பமாக இருக்கும் தனது வயிற்றை கண்ணாடியில் பார்த்து சிரிப்பது போன்ற ஃபோட்டோ ஒன்றை தற்போது இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார்.

    இந்த ஃபோட்டோவை ஷேர் செய்து வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மெசேஜ் ஒன்றையும் பதிவிட்டு இருக்கிறார். "உன் மீதான என் அன்பின் வலிமை, வேறு யாருக்கும் தெரியாது. எல்லாவற்றுக்கும் மேலாக உள்ளே இருந்து என் இதயம் எப்படி ஒலிக்கிறது என்பது உனக்கு மட்டுமே தெரியும். ஐ லவ் யூ பாப்பா" என்று எழுதி உள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: